தென்கயிலை..
  • 10:30AM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:30AM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

தமிழகத்தில் கோவை மாநகரத்தில் இருந்து 40 km தொலைவில் உள்ளது வெள்ளியங்கிரி மலை.மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கொட்டும் பனியும்,இயற்கை எழிலும் கூடிய வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் ஒரு புனித தலமாகும்.பக்தர்களால் தென்கயிலை என்று அழைக்கப்படுகிறது இந்த அழகிய பிரதேசம்.இது மேகங்கள் சூழ, வெள்ளி போர்வை மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது.இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை காணப் பக்தர்கள் கூட்டமாகத் திரண்டு வருகின்றனர்.

Image result for velliangiri mountain

திருமால் சிவபெருமானின்  கட்டளையை ஏற்று, பீதாம்பரத்தைப் பூமியில் வீசி, ருத்திராட்சம் அணிந்து, சடைமுடி தரித்து, விபூதியை உடலெங்கும் பூசி, உணர்ச்சி பொங்க சிவன் நாமத்தை உச்சரித்தார் என்று கூறப்படுகிறது. பின், காஞ்சிமாநதியில் நீராடி, தென்கயிலாயமான வெள்ளிங்கிரி மலைமீது ஏறி இறைவன், இறைவியைத் தரிசித்தார் என்பது தல வரலாறு.

Related image

கோவைப் பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரமான பூண்டி வரை பேருந்து வசதி இருக்கிறது.பின் மலையடிவாரத்தில் இருந்து பயணம் தொடர்கிறது.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் அதிகம் என்பதால் மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்குச் சென்று சேர்கிறார்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top