இனிமேல் வாகனங்களின் தோற்றத்தை மாற்றியமைப்பது சட்டவிரோதமா??
  • 12:32PM Jan 11,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 12:32PM Jan 11,2019 Chennai

ஒரு வாகனத்தை உற்பத்தியாளர்கள் எப்படி வடிவமைத்து விற்பனை செய்கிறார்க்ளோ அந்த வடிவம் தான் இறுதிவரை இருக்க வேண்டும் என்றும் அதை மீறி வடிவத்தை மாற்றுவது சட்டப்படி குற்றம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் வாகனங்களின் வடிவமைப்பை மாற்றி அமைப்பது சட்டவிரோதம் என நீதிமன்றம் எடுத்துரைத்தது.இது குறித்து வந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் வினித் சரண்,விசாரித்த போது 1989 கேரள மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் வாகனத்தின் மாற்றங்கள் ஏற்புடையது எனக் குறிப்பிட்டிருந்தது.

Related image
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், 1989 கேரள மோட்டார் வாகனச் சட்டம் மீதான முறையீடு வழக்கிலேயே வாகன மாற்றம் என்பது சட்டவிரோதமானது என்பதைக் குறிப்பிட்டு,ஒரு வாகனம் அதன் திறன், சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் பொருட்டுத் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.இவற்றைப் பாதிக்கும் எந்தவொரு மாற்றமும் ஏற்புடையதல்ல" எனத் தீர்ப்பளித்தனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top