#Citizen Movie : சிட்டிசன் பட நாயகியா இப்படி மாறி விட்டார்? கண் விழி பிதுங்கி பார்க்கும் இரசிகர்கள்!
  • 12:03PM Apr 30,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:03PM Apr 30,2019 Tamil Nadu

சினமாவை பொறுத்த வரைக்கும் ஒரு நடிகரும், நடிகையும் ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாற்பது ஆண்டுகள் கழித்த பின்னர் அந்த நடிகருக்கு, அப்போது கூட கதாநாயகன் ரோல் கிடைக்கும், ஆனால் நடிகைக்கு அம்மா அல்லது அதற்கடுத்த துணை நடிகை வாய்ப்பு தான் கிடைக்கிறது. ஒரு நடிகை பத்து வருடம் திரை துறையில் தாக்குப்பிடித்து நின்று விட்டாலே அது சாதனையாக பார்க்கப்படுகிறது. வயது ஆக ஆக ஆண் நடிகர்களின் தோற்றம் எப்படி இருந்தாலும் அவர்களை கதாநாயகர்களாக ஏற்றுக்கொள்ளும் ரசிகர்கள், நடிகைகள் விசயத்தில் அப்படியே அந்தர் பல்டி அடித்து விடுகின்றனர்.

இதனால் தான் பல நடிகைகள் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் வரையில் முழு மூச்சாக நடித்து விட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருப்பதை காண முடிகிறது. ஆண்களை விட பெண்களுக்கு சீக்கிரமே முதுமை எட்டி பார்த்து விடுகிறது. அதனை தள்ளி போடவே மெனக்கெட்டு ஜிம்மிற்கு போவது, உணவு கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிப்பது என்று முன்னணி நடிகைகள் மும்மரமாக இருக்கும் வீடியோவை அடிக்கடி பார்க்கலாம்.

அந்த வகையில் அறிமுகமான படத்திலேயே இரசிகர்கள் மனதை கவர்ந்து, ஒரு சில படங்களே நடித்து விட்டு காணாமல் போனவர் வசுந்தரா தாஸ். தல அஜித் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் படத்தில் நடித்தவர் வசுந்தரா தாஸ். தமிழ் குடும்பத்தில் பிறந்த இவர். வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான். முதல்வன் படத்தில் 'ஷக்கலக்க பேபி' பாட்டுக்கு ஆட்டம் போட்டு இரசிகர்களை குஷி படுத்தியவர். சிட்டிசன் படத்திற்கு பிறகு, கமலுடன் ஹேராம் படத்தில் நடித்தார். அதன் பிறகு இந்தி சினிமா பக்கம் சென்றவர். கோலிவுட் பக்கம் எட்டி பார்க்கவே இல்லை.

வெகு நாட்களுக்கு பிறகு அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் சற்று உடல் எடை கூடி காணப்படுகிறது. ட்ரம்ஸ் கலைஞர் ரோபர்ட் நரேன் என்பவரை திருமணம் செய்துகொண்ட பிறகு எங்கு போனார் என்றே தெரியாமல் இருந்த வசுந்தரா தாஸ். ஒரு புகைப்படத்தின் மூலம் அன்றைய இரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். முதலில் யாரென்றே அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல், திணறியவர்கள். பழைய படத்தை ஒப்பிட்டு பார்த்த பிறகே கண்டுபிடித்தனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top