கத்தி சண்டை பழகும் வரலக்ஷ்மிக்கு என்ன நேர்ந்தது பாருங்க...
  • 16:55PM Mar 09,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:55PM Mar 09,2019 Kodambakkam

இளைய தளபதி விஜய் அவர்களுடன் “சர்கார்”, விஷாலுடன் “சண்டக்கோழி 2”, தனுஷுடன் “மாரி 2” உள்ளிட்ட திரைபப்டங்களில் வலுவான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வரலக்ஷ்மி. கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் போன்ற கொள்கைகள் ஏதுமின்றி, தனக்கு சவாலாக தோன்றும் அத்தனை கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஜே.கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜ பார்வை’ திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக வரலக்ஷ்மி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் க்ளைம்கேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

D1MyadZVYAAp_kT.jpg

அதில், நடிகை வரலக்ஷ்மி கத்தியை பிடித்து சுழற்றி சண்டைபோடும் காட்சிகள் இருப்பதாக தெரிகிறது. அதற்காக பெரிய கத்தி ஒன்றை கையில் சுழற்றி பிடிக்கும் பயிற்சியில் வரலக்ஷ்மி ஈடுபட்டுள்ள வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், “பொண்ணுங்க சண்டை போட முடியாதுன்னு யார் சொன்னா?, ராஜ பார்வை க்ளைமேக்ஸ் ஷூட்டில் நிஜ கத்தியை வைத்து பயிற்சி எடுக்கிறேன். பயிற்சி இருந்தால் எதுவும் சாத்தியம். நான் சரியாக கத்தி சுழற்றும் போது இந்த வீடியோவை எடுத்த ஹேர் டிரெஸ்ஸர் ஸ்ரீதருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

download.png

Top