VANTHE BHARATH: முதல் நாளிலேயே தொழில்நுட்பக் கோளாறு!!! நடுவழியில் நின்ற SUPER FAST EXPRESS!!!
  • 16:21PM Feb 16,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:21PM Feb 16,2019 Chennai

  

VANTHE BHARATH SUPER FAST EXPRESS!!! மோடி அரசு தன்னுடைய பெரிய சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் சில விஷயங்களில் இதுவும் ஒன்று. இதன் வெள்ளோட்ட வீடியோவை PIYUSH GOYAL சற்று வேகப்படுத்தி TWEET போட்டு வைக்க, அதை உடனடியாக எதிர்க்கட்சிகள் மறுத்ததோடு உன்மையான வீடியோவையும் வெளியிட்டனர். இதையடுத்து PIYUSH GOYAL-ஐ #FASTERGOYAL என்று சமூக வலைத்தளங்களில் NETIZEN-கள் போட்டு வறுத்தெடுத்து விட்டனர். BULLET TRAIN வகையைச் சேர்ந்த இதனை இயக்க அரம்பித்தால், வெகு சீக்கிரம் செல்ல வேண்டிய இலக்கை அடைந்துவிடலாம் என்றும் சொன்னார்கள். மத்திய அரசு கொண்டு வரும் எல்லாத் திட்டங்களிலும் இந்த வெகு சீக்கிரம் என்ற வார்த்தை மட்டும் TRADEMARK போல…

18ம் தேதி முதல் COMMERCIAL-ஆக இதனைப் பயன்படுத்தத் திட்டமிட்டு, வெள்ளோட்டத்தின் போதே மக்களுக்கு டிக்கெட் கொடுத்து களத்தில் இறக்கிவிட்டனர். CRPF மீது தாக்குதல் நடந்த நிலையில், பிரதமர் இதை அவசரமாகக் களமிறக்க திறப்பு விழாவுக்கு வந்து அதனால், மக்களின் கோபத்திற்கு ஆளாது தனிக்கதை. இப்படி ஆரம்பம் முதலே குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த இந்த ரயில், இன்று அதிகாலை டில்லி சென்று கொண்டிருக்கும் போது, உத்திரப்பிரதேசத்தின் டுன்ட்லா பகுதியில், டில்லியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் BREAKDOWN ஆனது. ரயிலின் உள்ளே இருநதவர்கள், வித்தியாசமான ஏதோ சப்தம் கேட்டதாகவும், அதற்கு பின்னர், நான்கு பெட்டிகள் செயலிழந்ததாகவும், அதனால் ரயிலை நிறுத்த வேண்டி வந்ததாகவும் தெரிவிக்கின்றனர். சிலரோ தண்டாவளத்தைக் கடக்க முயன்ற மாட்டின் மீது இடித்து விட்டார்கள் என்று சொன்னாலும், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இன்னமும் என்ன பிரச்சினை என்று புரியாமல் மண்டை குழம்பிப் போய் இருக்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். TRAIN 18 என்று அழைக்கப்படும் வாரனாசி, டில்லி வழியில் செல்லும் இந்த ரயில், பழுதடைந்துள்ளதால், அருகிலிருந்த ஏதாவது ரயிலவே ஷெட்டுக்கு இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயண நேரத்தில் 130 கிமீ வேகத்தைத் தொட்டதாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவத்தால், பயணிகள் அனைவரையும் வேறு ரயிலில் ஏற்றி டில்லிக்கு திருப்பி அனுப்பியுள்ளார்கள். என்னதான் இயந்திரம் பழுத என்றாலும், வெள்ளோட்டத்திலேயே பழுதா என்று மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள். எதனால், வண்டி நின்றது என்று தெரியும்போது இன்னும் பல சுவாரஸ்ங்கள் காத்துக் கொண்டிருக்கிறது போல!!!

Share This Story

You Might Also Like These
Related Stories
Top