Shoreline

என்னங்க வெறும் 300 பேரை வச்சிக்கிட்டு 3 லட்சம் பேரை எப்படி சமாளிக்க முடியும்? உங்க நிர்வாக முறை உண்மையாலுமே வியப்படைய செய்கிறது போங்க!

Jul 22 2021 07:03:00 PM

தெற்கு பசிபிக் கடலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அழகான நாடு தான் வணாட்டு ( Vanuatu ). 2019ம் ஆண்டி கணக்கின் படி இந்த நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 3 லட்சம் பேர். 70 முதல் 80 தீவுகளை உள்ளடக்கிய நாடு தான் வணாட்டு. இந்த தீவுகள் யாவும் சுமார் 1300 கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.

vanuatu-mobile-force

மிகவும் அழகான கடற்கரைகளை கொண்டுள்ள இந்த தீவுகளில் அதிக அளவில் பவளப்பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. ஸ்கூபா டைவிங் செய்வதற்கு ஏற்ற இடமாக இந்த தீவுகள் இருக்கிறது. இதன் காரணமாக இந்த நாட்டுக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

vanuatu-mobile-force

இந்த நாட்டின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் ராணுவப்படை என்பதே இவர்களுக்கு கிடையாது. நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை கவனித்துக்கொள்ள போலீஸ் படைகள் பயன்படுத்தப்படுகிறது. Vanuatu Mobile Force என்று இந்த நாட்டின் போலீஸ் படை அழைக்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சம அளவில் இருக்கும் இந்த படையில் கிட்டத்தட்ட 300 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

vanuatu-mobile-force

இந்த படைக்கு என்று தனியாக பாதுகாப்பு உபகரணங்களும், ஆயுதங்களும் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு இணையான பாதுகாப்பு உபகரணங்களை இவர்களுக்கு அளித்து நாட்டை அமைதியாக பாதுகாத்து வருகிறது வணாட்டு அரசாங்கம். வெறும் 300 காவலர்களை கொண்டு 3 லட்சம் மக்களை பாதுகாப்பது மிகவும் சவாலான காரியமாக இருந்தாலும் அதை திறம்பட செய்து வருகின்றனர் இந்த நாட்டின் காவல் துறையினை சேர்ந்த வீரர்கள்.