Exquisite

இந்த ரணகளத்திலும் இவனுங்களுக்கு இப்படி ஒரு கிளுகிளுப்பு தேவையா ? கொஞ்சம் மிஸ் ஆனாலும் பொங்க வைக்க வேண்டியது தான் !

Apr 03 2021 09:10:00 PM

ஐஸ்லாந்தில் சமீபத்தில் வெடித்த பாக்டரால்ஸ்பஜால் என்ற எரிமலைக்கு அருகே இளைஞர்கள் விளையாடும் காட்சி காண்போரை பதற வைக்கிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறி வரும் இந்த எரிமலையானது லாவா குழம்புகளை வெளியேற்றி வருகிறது.

valcano-blast-playing

அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இதுவரை எரிமலை வெடிப்பினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் மிக ஆபத்தான பகுதியாக கருதப்படும் வெடித்து சிதறிகொண்டிருக்கும் எரிமலையின் அருகில் 6 இளைஞர்கள் சாவகாசமாக கைப்பந்து விளைsevveyயாடி வருகின்றனர். கைப்பந்து விளையாடியதை வீடியோ எடுத்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த இளைஞர்களுக்கு பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

valcano-blast-playing

ஆபத்தை உணராமல் எரிமலைக்கு அருகே சாகசம் செய்வதாக நினைத்துக்கொண்டு விளையாடுவது பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அங்கு வாழும் மக்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் பொழுதுபோக்கிற்காக அடிக்கடி இப்படி செய்யும் இவர்களை போன்றவர்கள் எவர் கூறுவதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை.ma