பிரஸ் மீட்டில் கர்ஜித்த பிரேமலதா - ஊளையிட்டு மாட்டிக்கொண்ட வைகோ : வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
  • 13:33PM Mar 09,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:33PM Mar 09,2019 Tamil Nadu

your image

 

தேமுதிக குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். இதில் பல இடங்களில் செய்தியாளர்கள் வரம்பு மீறி கேள்வி கேட்டதை தொடர்ந்து அதற்கு காட்டமாக பதிலளித்தார். அப்போது ஒருமையில் பேசுவதாக கூறி அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் கூச்சலிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அவர்களின் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தார் பிரேமலதா. இதற்கு முன்னர் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசிய பொழுதும் இதே போல தான் நடந்தது.

முன்பு இல்லாத அளவிற்கு தற்போது அரசியல் கட்சிகள் சார்பான செய்தி ஊடகங்கள் பெருகிவிட்டன. ஒரு தலைவரிடத்தில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் , அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற அதிகார தோணியில் சில ஊடகங்கள் கேள்வி எழுப்புவதை காண முடிகிறது. ஒரு கட்சி சார்புடைய ஊடகம் ஒரு கேள்வியை கேட்கின்றது என்றால், தான் சார்ந்த கட்சிக்கு ஆதரவாகவும், கேள்வி கேட்பவர்களுக்கு எதிராகவும் அமையும் விதண்டவாத கேள்விகளாகவே அமைகிறது. இதனால் தான் நேரலையில் பேட்டியளிக்கும் பொறுமையான அரசியல் கட்சி தலைவர்கள் கூட உச்ச கட்ட விரக்திக்கு சென்று விடுகின்றனர்.

அந்த வகையில் தான் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதும் அமைந்திருக்கிறது. இதனை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ பிரேமலதா பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியது தவறு. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஊரில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் கிளறி பார்க்கும் வைகோ, தான் என்ன செய்தோம் என்பதை ஒரு கணமாவது சிந்தித்து இருந்தால் இந்த பேச்சு வருமா..? என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருமுறை பிரேமலதா பேசியதை இப்படி பெரிது படுத்தும் வைகோ, அவரே பலமுறை ஊடகங்களை தரக்குறைவாகவும், கீழ் தரமாகவும் விமர்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோகளை பகிர்ந்து வைகோவின் மனநிலை குறித்து பதிவிட்டு வருகின்றனர் தேமுதிகவினர்.

 

 

Tags

Share This Story

முருகானந்தம்

Top