Lushgreen

திரைத்துறையில் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் வடிவேலுவை மீண்டும் ரசிகர்கள் பழைய மாதிரி கொண்டாடுவார்களா?

Sep 12 2021 09:39:00 PM

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் கூட்டணிக்கு பிறகு தனி ஒரு ஆளாக சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. ஒரு காலத்தில் இவருடைய கால் சீட்டுக்காக நாட்கணக்கில் வரிசையில் நின்ற தயாரிப்பாளர்கள் ஏராளம். தன்னுடைய வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காமல் விஜயகாந்தையும், அந்த நேரத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுக கட்சியையும் வாய்க்கு வந்தபடி பேசி பட வாய்ப்புகளை இழந்தார்.

vadivelu tamil cinema new entry

இப்போது மீண்டும் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் தன்னுடைய பழைய பார்முக்கு திரும்ப ஆரம்பித்துள்ளார். வரிசையாக நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்று வருகிறார். என்னதான் படவாய்ப்புகள் வந்தாலும் மீண்டும் பழைய படி ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்களா என்கிற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.

vadivelu tamil cinema new entry

வடிவேலு சினிமாவுக்கு வந்த புதிதில் காத்தடிச்சா பறந்து போகிற மாதிரி ஒல்லியான தோற்றத்தில் இருந்தார். பின்னர் சினிமா துறையில் பெரிய ஆளாக மாறிய பிறகு கொஞ்சம் உடம்பு போட்டுவிட்டார். இப்போது பல வருடங்களாக நடிக்காமல் வீட்டிலேயே இருப்பதால் ரொம்ப உடம்பு போட்டு இவருதான் வடிவேலா என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறார்.

vadivelu tamil cinema new entry

உண்மையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்களை விட அந்த படங்களை பார்க்கும் ரசிகர்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா என்பது ஒரு மிகப்பெரிய சந்தேகம் தான். பழைய மாதிரி எந்த தயாரிப்பாளரையும், இயக்குனரையும் சுத்தவிடாமல் ஒழுங்காக தனது பழைய நகைச்சுவை பாணியில் நடித்தால் சினிமா உலகமும், ரசிகர்களும் அவரை கொண்டாடுவார்கள் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.

vadivelu tamil cinema new entry