#UzhavanFoundation உழவனுக்காகக் கடைக்குட்டி சிங்கத்தின் அதிரடி போட்டி! ஜெயித்தால் 1.5 லட்சம் அப்படியே எடுத்துப்போகலாம்!
  • 17:21PM Jul 06,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:21PM Jul 06,2019 Chennai

கடந்த வருடம் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ஷயீஷா, பிரியா பவனி போன்ற திரைபட்டாளமே ஒன்று சேர்ந்து நடித்த திரைப்படம் "கடைக்குட்டி சிங்கம்". விவசாயத்தையும், குடும்ப உறவையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் எதிர்பார்க்காத வசூல் சாதனை படைத்தது. இந்திய துணை ஜனாதிபதி இந்தத் திரைப்படத்தைப் பார்த்து தனது பாராட்டையும் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படத்தில் தனது விவசாயி கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்த கார்த்தி, விவசாயிகளின் வாழ்வுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும் என்று ஒரு முடிவெடுத்தார். அதன்படி விவசாயிகளுக்காக "உழவன் ஃபவுண்டேஷன்" என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பில் மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், மருத்துவர் கு.சிவராமன், இயற்கை விவசாயிகள் அமைப்பின் அனந்து, பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் ஆகியோர் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சிறுகுறு விவயசத்திற்கு உதவும் வகையில் "உழவன் ஃபவுண்டேஷன்" சார்பாக ஒரு போட்டியை அறிவித்துள்ளனர். விவசாயத்தை எளிதாக்கும் வகையில் நவீன வேளாண் கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, உழவன் ஃபவுண்டேஷன் மூலம் ரூ.1.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இத்தகவலை சமூக வலைத்தள நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் கொண்டு சேர்க்குமாறு தெரிவித்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top