Highrise

இந்த டெடி எப்படி இவ்வளவு தூரம் நடந்திருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆராய்ந்து பார்த்தால் யாரும் எதிர்பார்த்திராத அ திர்ச்சி காத்திருக்கிறது நமக்கு

Apr 28 2021 08:18:00 AM

அமெரிக்காவை சேர்ந்த ஜெஸ்ஸி லாரியோஸ் என்ற 33 வயது நபர் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டுவதர்காக வித்தியாசமான முயற்சி ஒன்றில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். டெடி பியர் போல உடை அணிந்து கொண்டு சுமார் 644 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று நிதி திரட்டியுள்ளார்.

usa-teddy

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து சான் பிரான்ஸிஸ்கொ வரை இந்த 644 கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் அவர். இந்த பயணத்தின் மூலம் இதுவரை 7100 டாலர்களை நிதியாக திரட்டியிருக்கிறார் இந்த மனிதர். இந்திய மதிப்பில் இதன் மதிப்பு 5.3 லட்ச ரூபாய் ஆகும்

usa-teddy

 

திடீரென தனது மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற அதை உடனே செயல்படுத்த நினைத்து அதை தொடங்கி விட்டார் ஜெஸ்ஸி லாரியோஸ். தன்னுடைய டெடி பியர் கெட்டப்புக்கு பியர்சன் என்ற பெயர் சூட்டி ஏப்ரல் மாதம் 12ம் தேதி இந்த நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது இந்த செயலுக்கு உலகம் முழுவதும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் சான் பிரான்ஸிஸ்கொ சென்றடைந்த பின்னர் முழு விபரத்தையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்