குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்க சில வழிகள்
  • 05:02AM Nov 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 05:02AM Nov 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

குழந்தைகளை வளர்ப்பது என்றால் பெற்றோருக்குப் பெரிய பயத்தைத் தருவது தூங்கும் போதே சிறுநீர் கழிப்பது தான்.இது காலையில் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறிவிடும்.அப்படிப் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுக்கச் சில வழிகள்.

 

குழந்தைகளின் சிறுநீர் சேமிக்கும் சக்தி மிகக் குறைவு.மலை நேரங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் விளைவு தான் இப்படிச் சிறுநீர் கழிப்பதற்கு முக்கியக் காரணம் ஆகும்.குழந்தைகள் தூங்கும் பொழுது ஒரு ஆழ்ந்த நிலைக்குச் சென்றுவிடுவார்கள்.அதனால் அவர்களுக்குச் சிறுநீர் வரும் பொழுது மூலையில் இருந்து வரவேண்டிய ஒரு விதமான சிக்னல் வராமல் இருப்பதாலே இந்தச் சிறுநீர் கழிப்பதிற்குக் காரணம்.சில குழந்தைகளுக்கு ADH என்ற ஹார்மோன் சரியாக உற்பத்தி ஆகாமல் இருப்பதால் இப்படி நிகழ வாய்ப்புள்ளது.ADH ஹோர்மோன் இரவில் சிறுநீர் உற்பத்தியைக் குறைக்க உதவும் ஹோர்மோன். பெண் குழந்தைகளை ஒப்பிடும் போது ஆண் குழந்தைகள் தான் அதிகம் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்குக் குழந்தைகளை இரவில் தூங்குவதற்கு முன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று பழக்கவைக்க வேண்டும்.குழந்தைகளைத் திட்டுவதினாலோ இத்தகைய செயல்களைத் தடுக்க முடியாது.இரவு நேரங்களில் அதிகம் தண்ணீர் பருகுவதைக் குறைக்கப் பழகுங்கள்.

இது புரியாமல் பெற்றோர்கள் சிலர் குழந்தைகளுக்கு ஒரு விதமான மருந்துகளைக் கொடுத்து வருகின்றனர்.இதன் மூலம் சிறுநீர் கழிப்பதைக் குறைப்பார்கள் ஆனால் இதில் பின்விளைவுகள் அதிகமாக இருக்கும்.இதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம்.இதைப் பெற்றோர்கள் முழுவதுமாகத் தடுக்க நினைப்பது தவறு,இதைக் கட்டுப்படுத்த நினைக்கலாம் ஆனால் முழுமையாக நிறுத்த முயற்சிப்பது அவர்களின் ஒரு சாதாரணமா சுழற்சியில் ஒரு மாற்றம் ஏற்படும் இது ஒரு விதமான மனா அழுத்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும்.குழந்தைகளின் சிறு சிறு தவறுகளைத் தடுப்பதை விட அதை ரசித்துப் பழகுங்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top