Lushgreen

எல்லாமே தலைகீழா போனா எப்படி இருக்கும்? எப்பவும் முன்னோக்கி தான் போகணுமா? கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு பார்க்கலாமா?

Jun 10 2021 06:47:00 PM

கேரளாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் தாமஸ் விஜயன். இவர் சமீபத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தில் ஒராங்குட்டான் ஒன்று மரத்தை அணைத்துக்கொண்டு தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பது போல தெரிகிறது. அதற்கு மேல் மரத்தின் இலைகள், கிளைகள் மற்றும் வானம் ஆகியவை தெரிகின்றன.

thomas-vijayan upside-down-photo orangutan

இந்த அற்புதமான புகைப்படத்திற்கு உலகம் தலைகீழாகப் போகிறது  என்று தலைப்பு வைத்துள்ளார் தாமஸ் விஜயன். இந்த ஒராங்குட்டான் புகைப்படத்துக்காக நேச்சர் டிடிஎல் என்னும் சர்வதேச அமைப்பு வழங்கும் 2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்பட கலைஞர் என்ற விருதை பெற்றுள்ளார் தாமஸ் விஜயன். இந்த புகைப்படத்தை ஒருவர் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது என நேச்சர் டிடிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது.

thomas-vijayan upside-down-photo orangutan

இந்த புகைப்படம் பார்க்கும்போது அனைவரையும் குழப்பமடைய செய்யும். ஒராங்குட்டான் தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பதை போல இந்த புகைப்படம் உள்ளது. ஆனால் உண்மையில் அது தலைகீழாக தொங்கவில்லை. கனடாவில் வசித்து வரும் தாமஸ் விஜயன் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் கொண்டவர். போர்னியா தீவுக்கு சென்ற சமயத்தில் இப்படி ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழுந்தது.

thomas-vijayan upside-down-photo orangutan

இதற்காக நீருக்கு நடுவில் இருக்கும் ஒரு மரத்தை தேர்வு செய்து அந்த மரத்தில் ஏறி நின்றுகொண்டு அந்த இடத்துக்கு வழக்கமாக வரும் ஒராங்குட்டானுக்காக காத்திருந்தார். சற்று நேரத்தில் அந்த ஒராங்குட்டான் வந்து மரத்தில் ஏறியது. சரியான நேரத்தில் இவர் காத்திருந்து புகைப்படம் எடுத்து அசத்தியுள்ளார். புகைப்படத்தில் தெரியும் மரத்தின் இலைகளும் வானமும் தண்ணீரின் பிரதிபலிப்பாகும். 8000 புகைப்படங்களுக்கு மேல் இந்த போட்டியில் கலந்து கொண்டது. இவ்வளவு கடுமையான போட்டியில் வெற்றி பெற்ற தாமஸ் விஜயன் விருதுடன் 1500 பவுண்டுகள் பரிசுத்தொகையும் பெற்றுள்ளார்.