#Unnao Rape : இளகிய மனமுள்ளவர்கள் இந்த செய்தியை படிக்கவேண்டாம் !!!
  • 11:15AM Feb 02,2020 Western Uttar Pradesh
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 11:15AM Feb 02,2020 Western Uttar Pradesh

சமீபத்தில் நடந்த ஹைட்ரபாத் பாலியல் வழக்கும் அந்த வழக்கில் குற்றவாளிகளை நேற்றைய தினம் என்கவுண்டரில் கொல்லப்பட்டதும் அறிந்து ,நாம் அனைவரும் நியாயம் கிடைத்ததாக மகிழ்ச்சியடைந்தோம்,உண்மையில் குற்றவாளிகள் பணபலம் மற்றும் அரசியல் பலம் இல்லாததால் தான் அவர்களை என்கவுண்டர் செய்துள்ளார்களோ என்று இப்பொழுது நீங்கள் இந்த செய்தியை படித்து முடித்தவுடன் நிச்சயம் உங்கள் மனதில் எழும் கேள்வியாக இருக்கும். உண்மையாகவே இளகிய மனமுள்ளவர்கள் இந்த செய்தியை படிக்கவேண்டாம் அந்தளவிற்கு கொடுமையான ஒரு செய்தி தான் இது.

unnao 4.jpg

இந்தியாவில் உள்ள  உத்தரப்பிரதேச மாநிலத்தின்  உன்னாவ் நகரில் 4 ஜூன் 2017 அன்று 17 வயது சிறுமி தனக்கு  வேலைகிடைப்பதற்கு உதவிவேண்டி  பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த MLA வான  குல்தீப் சிங் செங்கர் என்பவரது வீட்டிற்கு சென்றார், அப்பொழுது அந்த சிறுமியை குலதீப் சிங் செங்கர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினார்,அந்த சிறுமி  ஜூன் 22 2017 அன்று காவற்துறையினரிடம் தனக்கேற்பட்ட இந்த கொடுமை குறித்து புகார் செய்கிறார் இதிலிருந்தான் இந்த கொடூரம் ஆரம்பமாகிறது.ஆனால் பணமிருப்பவர் மற்றும் அரசியல்வாதி என்பதால் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரிக்காமல் வழக்கம் போல கிடப்பில் போடுகிறார்கள்.அதன் பிறகு இந்த வழக்கை வாபஸ் பெற சொல்லி செங்கரின் அடியாட்கள் அந்த சிறுமியின் தந்தையை அடித்து மிரட்டுகிறார்கள்,ஆனால் அடியாட்கள் அந்த சிறுமியின் தந்தை தான் தங்களை தாக்கியதாக காவல் நிலையத்தில்   ஏப்ரல் 5, 2018 அன்று புகார் அளித்தனர் சட்டம் தன கடமையை செய்தது ஆம் அடிவாங்கி ரத்தவெள்ளத்திலிருந்த அந்த சிறுமியின் தந்தையை கைது செய்தது !

unnao 3.jpg

பாவப்பட்ட அந்த பெண்ணின் தந்தை தன்னை குலதீப் சிங் செங்கரின் சகோதரரான அதுல் செங்கர்  தாக்கியதாக முறையிட்டும் அம்முறையீடு குறித்து எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அந்த .ஏழையின் வாக்கு எடுபடவில்லை.அந்த தாக்குதலினால் அந்த சிறுமியின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறுது நாட்களில் இறந்து விடுகிறார்.இதனால் மனம்வெறுத்த அந்த சிறுமி ஏப்ரல் 8, 2018 அன்று தன்னைப் பாலியியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,மேலும் தனது தந்தை இறப்பிற்கு நீதி வேண்டியும்  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்றார்.இதன் காரணமாக ஏப்ரல் 9, 2018 அன்று  அதுல் சிங் செங்கரை  கைது செய்யதனர் ,அப்பொழுது தான் குற்றவாளியான  குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்போடைய 6 காவற்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

unnao.jpg

இந்த வழக்கு விரசரனை நடந்து கொண்டிருந்தது, அந்த வழக்கு விசாரணைக்காக வந்த  பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் வந்த பொழுது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார். இதையடுத்து சிறுமி பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆகியவை சிபிஐக்கு மாற்றப்பட்டது.  MLA செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் தீவிரத்தை  உணர்ந்த உச்ச நீதிமன்றம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் அனைத்தையும், உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்குகளின் மீது தினந்தோறும் விசாரணை நடத்தி 45 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25,00,000 உத்தர பிரதேச மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதற்கிடையே நேற்று அந்த பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் மண்ணை ஊற்றி தீ வைத்துள்ளனர் 90 சதவீத தீக்காயங்களுடன் அந்த பெண் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்தார் !!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top