#90'sKids கிரிக்கெட் ரசிகர்களே! யுவராஜ் சிங், 6 பந்துகளுக்கு 6 சிக்ஸ் அடித்த போட்டி எப்போது நடந்தது என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
  • 12:56PM May 20,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:56PM May 20,2019 Chennai

90'ஸ் கிட்ஸ்க்கும், கிரிக்கெட் விளையாட்டுக்கும் ஒரு தனிப் பந்தமே உள்ளது, கோடை விடுமுறை வந்தாலே கிரிக்கெட் பேட்டுடன் ஏரியா பசங்களைச் சேர்த்துக்கொண்டு கிரௌண்ட் கிரௌண்டாக அலைந்த நாட்கள் மறக்கமுடியாத நினைவுகளாகும். டிவியில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பாகினாலே நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு சிக்சையும் கைதட்டி கொண்டாடிய நாட்கள் 90'ஸ் கிட்ஸ்களால் மறக்கவே முடியாது, அதுவும் அக்தர் ஆவேசமாக 100 கிமி வேகத்தில் ஓடிவந்து போடும் பந்தை டிராவிட் அசராமல் சிங்கிள் தட்டிவிடும் போட்டிகளைப் பார்த்து பூரித்தவர்கள் 90'ஸ் கிட்ஸ். காலம் எவ்வளவு மாறினாலும் இப்படிச் சில நினைவுகளை ஞாபகப்படுத்தும் போது தான் நமக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணம் தோன்றும். அப்படிக் கிரிக்கெட் போட்டியில் நடந்த சில மறக்கமுடியாத நிகழ்வுகள் நடந்து எவ்வளவு ஆண்டுகள் கடந்தோடியுள்ளது என்பதை இங்குப் பார்ப்போம்.

#1 இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிவெற்றிபெற்றதும், Lord's balcony-யில் கங்குலி தனது டி-ஷர்டை கழட்டி ஆடினார். இந்தச் சம்பவம் நடந்து 17 வருடங்கள் ஓடிவிட்டது.

#2 Stuart Broad தன்னைக் கடுப்பேத்தியதால் யுவராஜ் சிங், அவர் வீசிய ஆறு பந்திலும் சிக்ஸ் அடித்து அசத்திய மேட்ச் நடந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.

#3 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் காலெடுத்து வைத்து 29 வருடங்கள் ஆகிவிட்டது. அதேபோலக் கிரிக்கெட் போட்டிகளுக்குச் சச்சின் டெண்டுல்கர் "குட் பை" சொல்லி 5 வருடங்கள் ஓடிவிட்டது.

#4 இருதரப்புத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடைசியாக மோதி 6 வருடங்கள் ஆகிவிட்டது.

#5 இந்திய கிரிக்கெட் பிரியர்களால் மறக்கமுடியாத பார்ட்னர்ஷிப், கங்குலி மற்றும் டிராவிட் முதன்முதலாகப் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி 23 வருடங்கள் ஆகிவிட்டது.

#6 300 அடித்த முதல் இந்தியன் என்ற பெருமையைச் சேவாக் பெற்று 15 வருடங்கள் ஆகிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி ஒருவராக 400 ரன்கள் அடித்துப் பிறயன் லாறா சாதனைப்படைத்து 15 வருடங்கள் ஆகிவிட்டது.

#7 தல தோணி தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் காலெடுத்து வைத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.

#90'sKids வாழ்க்கையில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும், நமது இனிமையான நினைவுகள் மறக்காது. இப்போது பல போட்டிகள் நடந்தாலும், அப்போது நாம் பார்த்து ஆனந்தமாக மகிழ்ந்த கிரிக்கெட் போட்டிகள் தனி இன்பத்தை ஏற்படுத்தும்.

Top