போயஸ் கார்டெனில் திடீர் ரெய்டு!!!
  • 20:24PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 20:24PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

போயஸ் கார்டெனில் திடீர் ரெய்டு!!!

சென்ற வாரத்தில் சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் அனைவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது.  இதில் அம்மாவின் தனிச் செயலாளர் பூங்குன்றன் வீடும் அடக்கம்.  ரெய்டு நடைபெற்ற சமயத்தில், தினகரன் தரப்பு அம்மா அவர்களின் உயில் மற்றும் ஹாஸ்பிடல் கேமரா பதிவுகள் ஆகியவற்றைத் தேடியதாக ஊடகங்களில் வெளிப்படையாக பேசி வந்தார்.  இதன் தொடர்ச்சியாக, ஆட்சி கலைக்கப்பட்டால், தானே அந்த உயில் மற்றும் கேமரா பதிவுகளை வெளியிடுகிறேன் என்று தினகரன் சொல்லியிருந்தார். இரண்டு மூன்று நாட்களாக சற்றே அமைதியாக இருந்த பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  காரணம், அம்மாவின் இல்லமான போயஸ் கார்டெனில் இன்று இந்த நிமிடம் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  செய்தி கேள்விப்பட்டவுடன் ஜெயா டிவி நிர்வாகி விவேக் உட்பட பலர் போயஸ் கார்டெனில் குவிந்தவண்ணம் இருக்கின்றனர்.  

இரவு 9.00 மணியளவில் தொடங்கிய சோதனை, சசிகலா அறையில் மட்டும் என்று வருமான வரித்துறை சொன்னாலும், அவர்கள் முதலில் சோதனையிட்டது தனிச் செயலர் பூங்குன்றன் அறையில்தான் என்று சொல்லப்படுகிறது.  பின்னர் சசிகலா அவர்களின் அறையிலும் சோதனை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. செய்தி அறிந்து வந்த தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கும் போதே சிலர் தீக்குளிக்க முயற்சி செய்ய, காவல்துறை தற்போது அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.  வருமானவரித்துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போதே ஒரு லேப்டாப், நாலு பென் டிரைவ் மற்றும் ஒரு கணினியையும் எடுத்துச் சென்றிருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மகளிர் அணியும் திரண்டு வருவதால், காவல் பலப்படுத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறது.  மூன்று மணி நேரங்களாக தொடரும் இந்த சோதனை எப்போது முடியும் என்று தெரியவில்லை.
என்ன காரணமாக இருந்தாலும், இரவு நேரத்தில் திடீரென்று வருமானவரி மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.  சென்ற வாரம் நடத்தப்பட்ட மெகா ரெய்டில் கூட இரவு நேரத்தில் திடீரென்று இப்படி சோதனை நடத்தப் போகாத பொழுது தற்போது போனது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தினகரன் இது குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு நாங்கள் யாரும் அங்கே செல்லவில்லை, அப்படி இருக்கும் போது அங்கே ஆவனங்களைத் தேடிப் போனதாக சொல்வது பொருந்தாத ஒன்றாக இருக்கிறது எனவும், லேப்டாப், பென் ட்ரைவ் இருந்தாலே ஆவணமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.  அம்மாவின் இல்லம் ஒரு கோவில் என்று சொன்னவர்கள், இது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும், எங்களை அடக்கி விட்டால் தங்கள் வழக்குகளிலிருந்து தப்பித்து விடலாம் என்ற எண்ணத்தில் எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முழுக்காரணம் எடப்பாடி பழனிசாமி அவரும், பண்ணேர்செல்வம் அவர்களும் என்றும் தினகரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது அம்மாவின் அறையையும் திறந்து காண்பிக்கச் சொல்லி வருமான வரித்துறை கேட்பதாக தகவல்கள் வருகின்றன. 
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது வேறு எந்த வேலையும் இல்லாதது போல வருமான வரித்துறை ஈடுபடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.  இருப்பினும், அம்மா மர்ம மரணம் குறித்த விசாரணை நடந்து வரும் நேரத்தில், கேமரா பதிவு மற்றும் உயிலை குறி வைத்து இந்த சோதனைகள் நடைபெறுவது உண்மையென்றால், அம்மாவின் மரணம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் ஏன் பயப்படுகின்றன என்று கேள்வியும் எழாமல் இல்லை.  தொடர்ந்து மத்திய அரசு வருமான வரித்துறை கடமையை செய்கிறது என்று சொன்னாலும், ஏற்கெனவே சென்ற ஆண்டு கிடைத்த சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி மீதும் கிடைத்த ஆவணங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேள்விகள் தற்போது பலமாக எழுந்திருக்கிறது.  எது எப்படியோ தற்போது சோதனை முடிந்த பிறகுதான் முழுமையான தகவல்கள் தெரிய வரும் என்பதால் ஊடகங்கள் அனைத்தும் தற்போது போயஸ் கார்டெனில் முகாமிட்டுள்ளது.  
தொடர்ந்து திரைப்படங்களையும் மிஞ்சும் விஷயங்கள் நடைபெற்று வருவதால், இந்த சோதனைக்கு எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் வலுத்து வருகிறது.  வருமான வரித்துறை மற்றும் மாநில அரசு நாளை வெளியிடும் அறிக்கையைப் பொறுத்துதான் மக்களின் மனநிலை தெரிய வரும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top