#underarms: பெண்கள் அக்குளில் இருக்கும் முடியை ஷேவிங் செய்வது நடைமுறையில் சாத்தியமா? என்ன சொல்லி வச்சிருக்காங்க பாருங்க!
  • 12:16PM Oct 15,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:16PM Oct 15,2019 India

அக்குளில் முடி வளர்வது ஆண்களுக்கு மட்டும் என்று இல்லை, பெண்களுக்கும் வளரும். ஆண்களுக்கு அடர்த்தியாக வளர்வதால் அதில் வியர்வை தேங்கி, வாடையும், அரிப்பும் ஏற்படும். அதற்காகவே, அக்குள் முடியை அகற்ற வேண்டுமென்று கூறுகின்றனர். சில நேரங்களில் வியர்வை தேங்குவதால் அந்த இடம் முழுவதும் நிறம் மாறி இருக்கும். அதனால் தான் முடி வளர வளர ஆண்கள் ஷேவ் செய்து கொள்கின்றனர்.

இதே நிலை பெண்களுக்கு வரும் பொழுது, ஷேவ் செய்தால் மீண்டும் அடர்த்தியாக வளர்ந்து விடுமோ என்று அச்சப்படுகின்றனர். இந்தவொரு காரணத்திற்காக அக்குள் முடியை அகற்ற வேண்டியதில்லை. அளவாக ட்ரிம்மிங் செய்து விட்டால் போதுமானது. அதன்பிறகு, அக்குளில் சோப் போடாமல், சுகந்த ஸ்நானப் பொடி என்ற குளியல்பொடியைப் பயன்படுத்தி, காலை, இரவு என தினமும் இருவேளைகள் சுத்தம் செய்து வந்தாலே போதுமானது. வியர்வைத் தேக்கமோ, வாடையோ இருக்காது.

சில பெண்களுக்கு இலேசான முடி மட்டுமே இருக்கும். அவர்கள் குளியல்பொடியைப் பயன்படுத்தி, அக்குளைச் சுத்தம் செய்து கொள்ளலாம். பெரிய நாட்டு மருந்துக் கடைகளில் குளியல்பொடி கிடைக்கும். மேலாடையைப் பொறுத்தவரை, காட்டன் துணியாலானதை அணிவது கூடுதல் பலன் தரும். இதை தவிர வேறு எந்த இரசாயன பொருட்களும் உபயோகிக்க கூடாது.

சில காஸ்மெடிக் பொருட்கள் ஆரம்பத்தில் இதற்கு தீர்வு அளிப்பது போல தெரிந்தாலும், இறுதியில் உங்கள் உடலுக்கு அதுவே வினையாகி விடும். முடிந்த வரையில் ட்ரிம் மட்டுமே செய்துவிட்டு, இயற்கையாக கிடைக்கும் பொடிகளை கொண்டு சுத்தம் செய்தால், எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். | Kidney Stone: கத்தியின்றி ரத்தமின்றி சிறுநீரக கற்களை அகற்ற ஒரே வழி இதுதான்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top