சின்ன வயசுல போதை என்ன வேண்டிக் கிடக்கு?
  • 07:23AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 07:23AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

நான் ரயில்வேயில் வேலை செய்கிறேன்ஓரு சிற்றூரில் உள்ள ரயில் நிலையத்தில் வேலை. வேலை செய்யும் இடத்திற்கும், தங்கியிருக்கும் குவார்ட்டர்ஸ்க்கும் இடையே சற்று தூரம் இருப்பதால் ரயில் பாதை வழியே நடந்து செல்வது வழக்கம்முதல் சில நாட்கள் பாதையிலேயே கவனமாக இருந்ததால் சுற்றி நடப்பதைச் சரிவர கவனிக்க முடியவில்லைபிறகு கொஞ்சம் கொஞ்சமாக, சுற்றி இருப்பது கவனிக்க ஆரம்பித்தேன். முதல் வாரத்தில் பள்ளிக்கூடத்து சிறுவர்கள் இரண்டு மூன்று பேர், பள்ளிப் பையை வைத்துக் கொண்டு சுற்றி அமர்ந்து ஸ்கூல்பாக்கில் இருந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தனர்படிக்கும் ஆர்வம் போல, எனக் கடந்து சென்று விட்டேன்.

இரவு முழுவதும் வீட்டில் கரெண்ட் கூட இல்லை போல, பாவம் மாலையில் படிக்க வருகிறார்கள் என்று எண்ணிக் கொண்டேன்காரணம், அவர்கள் போட்டிருந்த உடைகள் அவர்கள் வறுமைக்கும் கீழ் இருப்பதை வெளிப்படையாக காண்பித்துக் கொண்டிருந்ததுஇரண்டொரு நாட்கள் அவர்களும் அதே நேரத்தில் நான் கடந்து போவதைப் பார்த்து அவர்களும் கையை காட்டுவார்கள், நானும் கையை காட்டுவேன்ஒரு நாள் என் நண்பன் என்னைப் பார்க்க வந்திருந்தான். அவனுடன் பேசியதில் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு, இருவரும் கிளம்பி என் குவர்ட்டெர்ஸ்க்கு வந்து கொண்டிருக்கும் போது அந்தச் சிறுவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தேன்.

மூன்று பேரும் கிடந்த கோலத்தைப் பார்த்து பதறிப் போய் அருகே சென்று பார்த்தேன்நண்பரும் ஓடி வந்தார்அந்தச் சிறுவர்களைப் பார்த்தவுடன் அவர்களின் அருகில் இருந்த துணியை முகர்ந்து பார்த்து விட்டு, அசிங்க அசிங்கமாக அவர்களைத் திட்ட ஆரம்பித்து விட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை... பிறகு அவர் அந்தத் துணியை முகர்ந்து பார்க்கச் சொல்ல, சற்று கேராக இருந்ததுஅவர் ஒரு பாட்டிலை எடுத்துக் காண்பித்தார்ஸ்டேஷனரி கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும் whitener அது. சற்றே நினைவுடன் இருந்தவனை நண்பன் எழுப்பி அவன் வீடு எங்கே என்று விசாரிக்க, அவன் வண்டை வண்டையாகப் பேச ஆரம்பித்தான்.  வீட்டு விலாசம் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க பையை எடுக்க முயற்சித்தால் கல்லை எடுத்து எறிய ஆரம்பித்தான். 

வேறு வழியின்றி அப்படியே விட்டுவிட்டுப் போக வேண்டியதாகி விட்டதுவீட்டுக்கு தூக்கிக் கொண்டு போயிருக்கலாம், நண்பன் நாளை உன் வீட்டில் இதைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று சொன்னதால் வேறு வழி இல்லாமல் விட்டு போக வேண்டி இருந்ததுமறுநாள் முதல் அவர்கள் அந்த இடத்திற்கு வருவதை நிறுத்தி விட்டார்கள்தமிழகம் முழுவதும் எத்தனை சிறுவர்கள் இதே போல போதைக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று கவலையில் இப்போதெல்லாம் அந்த இடத்தில் யார் அமர்ந்தாலும் திட்டி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்... வேறென்ன செய்ய??? 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top