Timeless

தண்ணிக்குள்ளே தகிடுதத்தம் பண்ண நீங்க ரெடியா? உசுர கையில புடிச்சுக்கிட்டு வாங்க பாஸ்! இது நீங்க நினைக்கிற மாதிரி விஷயம் இல்லை!

Oct 06 2021 05:31:00 PM

ஹாக்கி விளையாட்டு பத்தி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஐஸ் ஹாக்கி பத்தி கூட கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால் தண்ணீருக்கடியில் விளையாடப்படும் ஹாக்கி விளையாட்டை பற்றி நீங்க கேள்விப்பட்டதுண்டா? இது நிஜம் தான். தண்ணீருக்கடியில் ஹாக்கி விளையாடும் சில துணிச்சல் மிக்க வீரர்களும் இந்த உலகத்துல இருக்குறாங்க. இந்த விளையாட்டை முதலில் இங்கிலாந்தில் தான் விளையாட ஆரம்பித்துள்ளனர். இங்கிலாந்தில் ஊடகத்துறையில் பணியாற்றி வரும் நண்பர் ஒருமுறை இந்த விளையாட்டை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் தெரிவித்த சில தகவல்கள் சுவாரசியமாக இருந்தது. அதைப்பற்றி உங்களுக்கு கூறுகிறேன் கேளுங்க.

under-water-hockey

தண்ணீருக்கடியில் ஹாக்கி விளையாடுவதில் பல சிரமங்கள் உள்ளது. இதை ஒளிபரப்பு செய்வது கூட கடினம் தான். மைதானத்தில் விளையாடும் போட்டிகளை பார்வையிடுவதைப்போல இதை எளிதாக பார்த்து ரசிக்க முடியாது. மொத்தம் 10 வீரர்கள் ஒரு அணியில் இடம்பெற்றிருப்பர். அதில் 6 பேர் விளையாட களமிறங்கலாம். மீதி 4 பேர் மாற்று வீரர்கள் ஆவர். விளையாடும் வீரர்கள் யாருக்காவது காயம், சுவாசக்கோளாறு, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் மாற்று வீரர்கள் அவர்களுக்கு பதிலாக களமிறங்கி விளையாடுவர்.

under-water-hockey

தண்ணீருக்கடியில் விளையாடுவது கடினம் மற்றும் உடலுக்கும் பாதிப்பு என்பதால் இந்த போட்டி மிகக்குறைந்த நேரத்தில் நடத்தி முடிக்கப்படுகிறது. 10 அல்லது 15 நிமிடங்கள் தான் போட்டி நடைபெறும். உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டும் 20 நிமிடங்கள் வரை நடைபெறுகிறது. இங்கிலாந்தில் தோன்றிய இந்த விளையாட்டு இப்போது உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டாக மாறியுள்ளது.

under-water-hockey

தண்ணீருக்கடியில் விளையாடுவதால் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். இதில் இருக்கும் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் நீருக்கடியில் தெளிவாக பார்த்து விளையாடுவது கடினம். இதற்காக டைவிங் மாஸ்க் அணிந்துகொண்டு வீரர்கள் விளையாடுகின்றனர். இதன் மூலம் நீருக்கடியில் தெளிவாக பார்க்க முடியும். சாதாரண ஹாக்கி அல்லது ஐஸ் ஹாக்கி விளையாடி சலித்துபோனவர்கள் இதை முயற்சித்து பார்க்கலாம். எனினும் உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்து கொண்டு பிறகு விளையாடுவதே புத்திசாலித்தனமானது.