#immunity: குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை பத்திரமாக பாதுகாப்பதால்,குழந்தையின் எதிர்காலமே கணிக்கப்படுகிறதா??
  • 22:15PM Nov 02,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 22:15PM Nov 02,2019 Chennai

தொப்புள் கொடி தாயையும்  சேயையும் ஒன்றாக இணைக்கும் பாலமாக செயல்படும் ஒருபாகம். இதனுள் குழந்தைபிறப்பிற்கு முன்   80மி.லி இரத்தம் இருக்கும். குழந்தைப் பிறந்தவுடன் போதுமான இடைவெளி விட்டு தொப்புள் கொடியை கத்தரித்து, 50மி.லி அளவு இரத்தத்தினை சேகரிப்பார்கள்.   பின்னர் உடனடியாக சேமிப்பு வங்கிக்கு அனுப்பி அங்கு திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி -196டிகிரியில் பாதுகாப்பார்கள்.  இந்த இரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், இரத்த பிளேட்லட்ஸ் மற்றும் stem cells எனும் ஆதார செல்கள் இருக்கும். 

அவ்வாறே இதனை  21வருடங்கள் சேமித்து வைப்பார்கள்.  இந்த இடைவெளியில் குழந்தைக்கு ஏதேனும் தீர்க்க முடியாத வியாதி ஏற்பட்டால்,  ஸ்டெம் செல்களைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்கிறது ஆராய்ச்சிகள். உடலில் ஒருசில உறுப்புகள் செயல் இழப்பு ஏற்பட்டால் இந்த செல்லை கொண்டு சேதம் அடைந்த உறுப்புகள் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு.இதன் அடிப்படையில் தான்  அக்காலத்தில் தொப்புள் கொடி காய்ந்து விழுந்த பின்னர் அதனை  தாயத்தாக  கழுத்தில் கட்டி வைத்தனர்.ஏதேனும் தீராத வியாதி ஏற்பட்டால் இதனை பாலில் அல்லது நீரில் கலந்து கொடுத்தனர். இந்த தாயத்து உடம்பில் படும்போதே குழந்தைகளுக்கு தோல் தொடர்பான வியாதிகள் அல்லது அரிப்புகள் ஏற்படாமல் இருக்கும். எதிர்காலத்தில் வரும் நோய்களுக்கான வரும்முன் எச்சரிக்கையே இந்த தாயத்துமுறை.    

ஆனால் தாயத்து என்பதெல்லாம் மூட நம்பிக்கை என சொல்லி முழுதாக முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாததன் விளைவு நமக்கே இன்னொருவர் சொல்லிக்கொடுக்கும் நிலை. மூதாதையர்களின் அறிவை இன்றைய தலைமுறையினர் மறுப்பு சொல்லாமல் பின்பற்றினாலே அவர்களது வாழ்வியலை மீட்டெடுக்க முடியும்.உதாரணத்திற்கு பெண் பூப்படைந்தால் மஞ்சள் வேப்பிலை நீரில் நீராடுவது, வளை பூட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்னும் சடங்கு சம்பிரதாயம் என்ற பெயரில் அறிவியல் சிந்தனைகள் நம்மை சுற்றி நிலவிகொண்டுதான் உள்ளன.இவற்றை நாம் மூட நம்பிக்கை என ஒதுக்காமல் இருந்தாலே போதும்.அவர்களது வாழ்வியலை மீட்டெடுக்க முடியும். #parenting: குழந்தைகள் முன் செய்யக்கூடாத 5 விஷயங்கள்! மீறி செய்தால் என்னவெல்லாம் நடக்கும்?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top