#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்!
  • 16:13PM Jul 10,2019 Kent
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:13PM Jul 10,2019 Kent

இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் உள்ளது ஸ்விங் பீல்ட்ஸ் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் தான் உலகப் புகழ்பெற்ற "செக்ஸ் திருவிழா" நடக்கும். இந்தத் திருவிழாவில் ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இந்தத் திருவிழாவில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான யாருடன் வேண்டுமானாலும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளலாம். அதேபோல வயது வித்தியாசமின்றி யாருடன் வேண்டுமானாலும் செக்சில் ஈடுபடலாம். இதுமட்டுமின்றிக் குரூப் செக்ஸ், கே, லெஸ்பியன் என அனைத்துவிதமான செக்ஸ் உறவிலும் ஈடுபடலாம்.

இந்தச் செக்ஸ் திருவிழா வருடாவருடம் நடைபெறும், ஐரோப்பியாவில் மிகப் பிரபலமான திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு எந்த விதமான தடையும் இல்லை. ஆனால் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ள முன்பே டிக்கெட் வாங்கிவிட வேண்டும். இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ள ஒருவருக்கு 250 பவுண்ட் வசூலிக்கப்படும், இந்திய மதிப்பில் 21 ஆயிரம் ரூபாயாகும். இந்தாண்டு நடந்த செக்ஸ் திருவிழாவில் கிட்டத்தட்ட 700 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த வாரம் சீரும் சிறப்புமாக நடந்த இந்தத் திருவிழாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. 52 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இந்தச் செக்ஸ் திருவிழாவில் கலந்துகொண்டார். இவர் அங்கிருந்த ஆண்-பெண்களுடன் குரூப் செக்சில் ஈடுபட்டபோது எதிர்பார்க்காத விதமாக அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. இந்தத் திருவிழாவை ஒருங்கிணைந்தவர்கள் பாட்டியை தூக்கி சென்று முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பாட்டிக்கு நெஞ்சுவலி வந்ததால் பதட்டம் நிலவினாலும் மீண்டும் கொஞ்ச நேரத்தில் திருவிழா தொடங்கிவிட்டது. திருவிழாவில் கலந்துகொண்ட பாட்டிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட செய்தி ஐரோப்பா முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top