Rainforest

வயிற்று பிழைப்புக்கு செய்த தவறு, இப்போது வயசு திமிரு காரணமாக செய்யப்படுகிறதா? எப்படி இருந்தாலும் தவறு தானே!

Apr 02 2021 08:29:00 PM

யுனைடெட் கிங்டம் செல்வ செழிப்பு மிக்க மக்கள் வாழும் பிரதேசம் என்று தான் இவ்வளவு நாட்களாக கேள்விப்பட்டிருப்போம். அங்கு நடந்தேறும் சில மோசமான நிகழ்வுகளை கேள்விப்பட்டால் அதிர்ந்து போய் மயங்கி விழுந்து விடுவீர்கள். கல்லூரி படிக்கும் மாணவிகள் கல்லூரி கட்டணத்துக்காக நினைத்து பார்க்க முடியாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

uk-student-sex-worker

அன்னா என்ற 18 வயது நிரம்பிய மாணவி அங்குள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். ஆனால் பகலில் மாணவியாக இருக்கும் அவர் இரவு நேரத்தில் பாலியல் தொழில் செய்து வருகிறார். இதுவரை சுமார் 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்துள்ள அவரை தவறாக நினைக்க வேண்டாம். அவர் இந்த சூழலுக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் தன்னுடைய கல்லூரி படிப்பிற்கு கட்டணம் செலுத்துவதற்காகத்தான் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. கல்விக்காக உடம்பை விற்கும் மாணவி இவர் ஒருவர் மட்டும் கிடையாது.

uk-student-sex-worker

சமீபத்திய புள்ளி விவரத்தின்படி அங்கு படிக்கும் மாணவிகளில் 20ல் ஒருவர் கல்லூரி கட்டணத்துக்காக பாலியல் தொழில் செய்கின்றனர். இந்த கணக்கின்படி பார்த்தால் அங்குள்ள 2.38 மில்லியன் மாணவிகளில் கிட்டத்தட்ட 95000 பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர மேலும் 5 லட்சம் மாணவிகள் பணக்காரர்களின் பாலியல் தேவையை நிறைவேற்ற முன்பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

uk-student-sex-worker

இப்படி ஒரு கொடுமையான சூழலுக்கு அங்குள்ள மாணவிகள் பலியாகியிருப்பது கேட்பதற்கே மிகவும் வேதனையாக உள்ளது. கல்லூரியில் படிப்பதற்காக இப்படி செய்யும் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவிகள் உட்படுத்த படுகின்றனர் என்று ஒரு பக்கம் புகார் வந்தாலும் மறுபக்கம் மாணவிகள் கல்லூரி கட்டணம் செலுத்த தாங்களாகவே விரும்பி பாலியல் தொழில் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.