Shoreline

நம்மில் பலரும் பயன்படுத்தும் முக்கியமான பொருள் ஒன்று இந்த நாட்டில் இருந்துதான் தனது பயணத்தை தொடங்கியது என்று உங்களுக்கு தெரியுமா?

May 27 2021 08:57:00 AM

உலகின் மிகவும் பழமையான மற்றும் புகழ் பெற்ற நிறுவனங்களில் ஒன்றுதான் UGG பூட்ஸ். காலணி மற்றும் ஷூ தயாரிப்பில் மிக முக்கிய நிறுவனமான இது இன்னமும் மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துவர். இந்த காலணிகள் முற்றிலும் தோலால் உருவாக்கப்படுகிறது. குளிர் மிகுந்த நாடுகளில் கால்கள் மற்றும் பாதங்களை கதகதப்பாக வைத்திருக்க இது மிகவும் உதவியாக இருக்கிறது.

ugg-australia

இந்த உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தின் தாயகம் எதுவென்று பார்த்தால் அது ஆஸ்திரேலியா. 1960களில் பனிச்சறுக்கு செய்யும் வீரர்கள் முதன் முதலாக இந்த வகை பூட்ஸ்களை பயன்படுத்த தொடங்கினர். 1970களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த பூட்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டது. 1990களில் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்ற UGG நிறுவன தயாரிப்புகள் 2000ம் ஆண்டிற்கு பிறகு உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

ugg-australia

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 70கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளுடனும், பல்வேறு லோகோவுடனும் இந்த பூட்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நாடுகளை தவிர UGG ப்ராண்ட் டெக்கர்ஸ் என்ற நிறுவனத்தால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தயாரிக்கப்படுகிறது. இது தவிர உலகெங்கிலும் கிட்டத்தட்ட 130 நாடுகளில் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளுடன் இந்த நிறுவன தயாரிப்புகள் விற்பனையாகிறது. பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் இந்த பூட்ஸ்கள் மக்களை பெரிதும் கவர்ந்த காரணத்தினால் விற்பனையில் பல மைல்கல்லை எட்ட உதவியாக இருந்தது.

ugg-australia