Timeless

இன்னமும் சில விசித்திர மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கின்றனரா? இது போன்ற சம்பவம் இதற்கு முன் நடந்திருக்குமா? பலருக்கும் தெரியாத அந்த மந்திரச்சொல் என்ன?

Jun 04 2021 08:02:00 AM

நாம் ஒரு பொருளை தொலைத்துவிட்டால் அது திரும்ப கிடைப்பது மிகவும் அரிதாகும். நல்லவர்கள் இருப்பின் எப்போதாவது அந்த பொருள் நிச்சயம் கிடைக்கும். எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் குற்றச்செயல்களே உலகத்தில் நடக்காது. லண்டனில் ஒரு பொருளை தொலைத்தவருக்கு 8 மாதங்கள் கழித்து அது திரும்ப கிடைத்த அதிசய நிகழ்வை பற்றி இப்பொது தெரிந்து கொள்வோம்.

uber-taxi-england

ஷேய் ஷேட் என்ற பெண் ஒருவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உபேர் டாக்ஸியில் பயணம் மேற்கொண்டார். அவர் டாக்ஸியில் இருந்து வெளியேறும் சமயத்தில் தனது மொபைல் போனை மறந்து விட்டு சென்றுவிட்டார். அவர் தனது வீட்டுக்கு சென்று நீண்ட நேரம் கழித்தே இதைப்பற்றி அவருக்கு தெரிய வந்தது. தனது பை, அறை என எல்லா இடத்திலும் தேடி பார்த்தும் மொபைல் கிடைக்கவில்லை. அன்றைய நாளில் அவர் நிறைய டாக்ஸியில் பயணம் செய்ததால் எதில் போன் தொலைந்திருக்கும் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

uber-taxi-england

தனது மொபைலுக்கு அவர் கால் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அவரால் தனது மொபைலை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. அப்போது தான் தன்னுடைய போனில் சார்ஜ் இல்லாமல் அது சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் என்று அவருக்கு தோன்றியது. இந்த சூழலில் இனிமேல் தனது போனை கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்ற முடிவுக்கு வந்தார் ஷேய் ஷேட்.

uber-taxi-england

அவர் பயணம் செய்த உபேர் டாக்ஸி டிரைவர் தனது காரில் ஒரு மொபைல் போன் இருப்பதை கவனித்தார். அந்த போன் ஷேய் ஷேட் என்பவருடையது என்று அவர் கண்டுபிடித்தாலும் அவரை தொடர்பு கொண்டு போன் என்னிடம் இருக்கிறது என்று தகவல் தெரிவிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் திரும்ப அவரை பார்க்கும் போது போனை கொடுத்து விடலாம் என்று முடிவு செய்துள்ளார் டாக்ஸி டிரைவர்.

uber-taxi-england

கிட்டத்தட்ட 8 மாதங்கள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் அதே உபேர் டாக்ஸியில் பயணம் செய்ய வந்தார் ஷேய் ஷேட். அவரை அடையாளம் கண்டுகொண்ட டிரைவர் அவரது தொலைந்துபோன செல்போனை திருப்பி அளித்தார். 8 மாதங்களுக்கு பிறகு தொலைந்த மொபைல் போன் திரும்ப கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திராத ஷேய் ஷேட் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். மேலும் அந்த டிரைவரின் நேர்மையையும் வெகுவாக பாராட்டியுள்ளார். பல மாதங்கள் கடந்தும் அந்த விலைமதிப்புமிக்க செல்போனை அவர் விற்காமல் நேர்மையாக திருப்பி கொடுத்த செய்தி லண்டன் நகர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.