#bjp Wins : அதிமுக-திமுக ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும்..? அதனையும் தூக்கி துவம்சம் பண்ணிய பாஜக : நறுக்குன்னு முடிந்த கதை!
  • 17:06PM May 24,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:06PM May 24,2019 India

இந்த முறை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது காங்கிரஸ் கட்சி. 2014 ஆம் ஆண்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் இந்த முறையும் இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த முதல் தேர்தல் என்பதால் பயங்கர எதிர்பார்ப்பு நிலவியது. அமோதி தொகுதி, கேரளாவில் வயநாடு தொகுதி என்று இரண்டு இடங்களில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமோதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க கட்சியை சார்ந்த ஸ்மிருதி ரானி வெற்றி பெற்றார். இதற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் வெற்றி பெற்றுள்ளார். அதே போல ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தியின் தாய்  சோனியாகாந்தி வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் நாட்டில் அதிமுக - திமுக கட்சிகளை போல உத்தரபிரதேசத்தில் இருபெரும் மாநில கட்சிகளாக விளங்குபவை சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும். இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட்ட போதிலும்  பா.ஜ.க.வின் வெற்றியை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் திராவிட இயக்க கட்சிகள்  பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது போல உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் இருபெரும் மாநில கட்சிகளாக கருதப்பட்டன. அவையே பாஜகவிடம் தோல்வியை தழுவியுள்ளன.

தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக என்று ஆட்சி மாறி மாறி வருவதை போல அங்கு இரண்டு கட்சிகளும் ஆட்சி அமைத்து வந்த நிலையில் இத்தேர்தலில் முதல் முறையாக இரு எதிர் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பா.ஜ.க.வை எதிர்த்து நின்றார்கள். இருந்த போதிலும் அசூர பலம் வாய்ந்த அந்த கூட்டணியை பா.ஜ.க. மிக எளிதில் வீழ்த்தியது. இது ஒரு பக்கம் என்றால் காங்கிரஸ் கட்சி  ஆட்சி செய்து வரும்  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

இதை எல்லாம் விட்டு விடுவோம் மேற்குவங்க மாநிலத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று கூறப்பட்டு வந்தது. அப்படி  ஒரு நிலையில் இருந்த பா.ஜ.க இன்றைக்கு திரிணாமுல் காங்கிரசுக்கு நிகராக இத்தேர்தலில் கணிசமான வெற்றியை பெற்றிருப்பது அக்கட்சியின் மீது மேற்கு வங்க மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது.

 

Share This Story

முருகானந்தம்

Top