Lushgreen

ரொம்ப படுத்தாதீங்கப்பா! இரண்டு புருவங்கள் இணைந்திருப்பின் அது நல்லதா? கெட்டதா? நொட்டை சொல் சொல்லியே நோவடித்த மாமி!

Feb 06 2021 12:55:00 PM

முகத்தின் அழகை தூக்கி நிறுத்துவதே இந்த புருவங்கள் தான். சோஷியல் மீடியாவில் நிறைய டைம் பார்த்திருப்போமே, சில பெண்கள் கண்களை மட்டும் போட்டோ எடுத்து போட்ருப்பாங்க. அந்த கண், புருவ அழகில் மயங்கி மட்டுமே நிறைய ஆண்கள் பேச வருவாங்க. புருவத்திற்கு என்று தனி ஈர்ப்பு இருக்கு. ஒரு சிலருக்கு அடர்த்தியா இருக்கும், சிலருக்கு ஊசி மாதிரி வளைந்த வில் தோற்றத்தை கொடுக்கும். எல்லாமே அழகு தானே. அப்படி இல்லாமலா புருவத்தை மட்டும் அழகு படுத்தும், திரெட்னிங் முறையெல்லாம் வந்திருக்கு.

eye eye-brow beauty

இப்படிப்பட்ட புருவத்தை வைத்து, தாழ்த்தி பார்த்தாங்க ஒரு காலத்தில். இரண்டு புருவங்களையும், நெற்றியின் நடுப்பகுதி பிரித்து வைக்கும். ஒரு சிலருக்கு மட்டும் அதிசயமாக, நெற்றி குழியை தாண்டி முடி வளர்ந்து, இரண்டு புருவங்களும் இணைந்திருக்கும். இதெல்லாம் ரொம்ப அரிதாக நடக்கும். இரு புருவங்கள் இணைந்த நெற்றியை பார்க்கும் போதே, அட்ராக்டிவ்வா தெரியும். முகம் எப்படி இருந்தாலும், தூரத்திலிருந்து பார்க்கும் போது, அந்த புருவம் மட்டுமே பளிச்சுன்னு தெரியும்.

eye eye-brow beauty

நான் ஸ்கூல் படிக்கும் போது என் தோழிக்கு இருந்தது. அதற்கு பிறகு, எனக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் அந்த மாதிரி இல்லை. ஆனால் அந்த காலத்தில், இணைந்த புருவத்தை வைத்துக்கொண்டு என் தோழி அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அவளை பார்க்கும் பெரியவர்கள் நிறையப் பேர்,  அவளுடைய புருவங்களைக் குறுகுறுவென்று பார்த்துவிட்டு, ஏதேதோ சொல்லிவிட்டு போவாங்க. புருவங்கள் இணைந்தால் குடும்பத்திற்கு ஆகாது, சீக்கிரம் செ த்து விடுவார்கள் என்று, வாய்க்கு வந்ததை அடிச்சு விடுவாங்க.

eye eye-brow beauty

ஒருத்தர் சொன்னது கூட பலிக்கவில்லையே. குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு அவளால் தான், குடுபத்திற்கு அடையாளமே கிடைத்திருக்கிறது. குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியராக பணியாற்றுகிறாள். ஒருமுறை அவளும் நானும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில், "தரித்திரம் எதிரில் வருது பாருன்னு" சொன்ன மாமி, இன்னைக்கு என் தோழி அரசு வாகனத்தில் தெருவில் செல்லும் போது, கூனி குறுகி நிற்கிறார். மனுஷன மனுஷனா பாருங்க. எல்லோரும் சொல்ற மாதிரி, ஒரு புத்தகத்தின் தகுதியை, அட்டைப்படத்தை வைத்து முடிவு செய்யாதீங்க.