Highrise

இந்த சந்திப்பு நிகழ இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது எப்படியோ கடைசியில் சந்திச்சிட்டாங்க!

May 01 2021 09:24:00 AM

தென்கொரிய நாட்டில் பிறக்கும் போதே பிரிக்கப்பட்டனர் இரட்டையர்களான மோலி சினெர்ட் மற்றும் எமிலி புஷ்னெல். பிறந்த உடனே இந்த இரண்டு பெண்களும் இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்தனர். தங்களுடன் பிறந்த இன்னொருவர் இருக்கிறார் என்று தெரியாமலேயே இந்தனை வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

identical-twins meet-after-36years

தாங்கள் இரட்டையர்கள் என்பதே தெரியாத இந்த சகோதரிகள் டி.என். பரிசோதனை மூலமே இந்த உண்மையை அறிந்திருக்கின்றனர்.தங்களுடைய கடந்த காலத்தை பற்றி தெரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் தேடி கண்டுபிடித்துள்ளனர். இணையத்தின் மூலம் சேகரித்த தகவல்களை சரிபார்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் சாட்டிங் மூலம் பார்த்து பேசி உறுதிப்படுத்திக்கொண்டனர்.

identical-twins meet-after-36years

சமீபத்தில் தங்களின் 36வது பிறந்தநாளில் இரண்டு பெண்களும் நேருக்குநேர் சந்தித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். மோலி சினெர்ட் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்து வந்திருக்கிறார். எமிலி புஷ்னெல் பென்சில்வேனியா பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தாரால் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறார். அமெரிக்காவில் இரு வேறு பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் பிரிந்து வாழ்ந்து வந்த இந்த இரட்டையர்களை சேர்த்து வைத்த பெருமை புஷ்னலின் 11 வயது மகளான  இசபெல்லையே சாரும். தனது தாயின் கடந்த காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்து டிஎன்ஏ பரிசோதனை செய்து அவருடன் பிறந்த இரட்டையரை கண்டுபிடிக்க தூண்டுதலாக இருந்துள்ளார்.