Highrise

ரெட்டையா பொறந்தவங்களுக்காக நடத்தப்படும் திருவிழா குறித்து உங்களுக்கு தெரியுமா? ரெட்டையர்களுக்கு இவ்வளவு மவுசு இருக்குதா?

Sep 25 2021 05:42:00 PM

ரெட்டையர்களாக பிறப்பது மிகவும் அபூர்மான விஷயம். அதிலும் ஒரே மாதிரி உருவமைப்பை கொண்ட இரட்டையர்களை காண்பது மிகவும் அரிது. எனக்கு தெரிந்து நான் இப்படிப்பட்டவர்களை நேரில் பார்த்தது கிடையாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்களில் மட்டுமே இப்படிப்பட்ட மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். உங்களில் பலரும் கூட என்னைப்போல இரட்டையர்களை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

twins-festival twinsburg-ohio

இரட்டையர்களாக இருப்பவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று ஜீன்ஸ் படத்துல நன்றாக காட்டியிருப்பாங்க. தனித்துவம் மிக்கவர்களாக இருக்கும் இரட்டையர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவிலுள்ள ஓஹியோவில் வருடந்தோறும் இரட்டையர் தின விழா கொண்டாடப்படுகிறது.

twins-festival twinsburg-ohio

ட்வின்ஸ்பர்க் என்ற இடத்தில் நடக்கும் இந்த விழாவில் இரட்டையர்களாக பிறந்தவர்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். ஒன்றாக ஒட்டிப்பிறந்தவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தாலும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ளலாம். இதுதான் உலகின் மிகப்பெரிய இரட்டையர்கள் திருவிழா என்று கருதப்படுகிறது.

twins-festival twinsburg-ohio

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் இரட்டையர் தின விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இரட்டையர்களுக்காக ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். விளையாட்டு மட்டுமல்லாது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுவதால் இது ஒரு அற்புதமான திருவிழாவாக உள்ளது.

twins-festival twinsburg-ohio

ஒரே மாதிரி உருவத்தைக்கொண்ட இரட்டையர்களை பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருந்தால் இந்த இரட்டையர் தின விழாவுக்கு செல்லுங்கள். இந்த திருவிழாவில் அதிக எண்ணிக்கையிலான இரட்டையர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவர். எனவே இந்த நிகழ்வை காண்பது மிகவும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓஹியோவில் நடக்கும் இரட்டையர் தின விழா நிகழ்ச்சியை நேரில் சென்று ஒருமுறை பாருங்கள். இரட்டையர்களின் சங்கமத்தை கண்டு களிப்பதற்கு இதைவிட சிறந்த இடம் எதுவும் இல்லை.