Shoreline

இந்த எளிமையான பொருட்களை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா ? இது தெரியாம அதிக காசு போட்டு வெளியிலே வாங்குகிறோமே

Apr 16 2021 09:56:00 AM

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. அதில் ஒன்றுதான் சானிடைசர் மூலம் கைகழுவுவது. கைகளை சுத்தம் செய்வது மிக அத்திவாசியமான பழக்கமாக மாறிவிட்ட சூழலில் அதற்காக நிறைய பணம் செலவழித்து சானிடைசர் வாங்கவேண்டியதில்லை. எளிதில் கிடைக்கும் பொருட்களை வைத்து நாமே தயாரிக்க முடியும்.

neem-turmaric-sanitizer

வேம்பு மற்றும் மஞ்சள் இந்த இரண்டை வைத்து எளிதாக சானிடைசர் தயாரிக்க முடியும். வேப்பிலைகளை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். கழுவிய வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து வைத்துவிட்டால் போதும். இயற்கை சானிடைசர் தயார். வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டுமே நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை பயன்படுத்துவதால் நமது உடலுக்கு எந்த ஆபத்துகளும் கிடையாது.

neem-turmaric-sanitizer

கடைகளில் விற்கப்படும் சானிடைசர்கள் கெமிக்கல் கொண்டும் தயாரிக்கப்படலாம். அது ஒரு சிலருக்கு சரும அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டும் நமக்கு எளிதாக கிடைக்கும் பொருட்களாகும். இதை வைத்து வீட்டில் இயற்கை சானிடைசர் தயாரித்து பயன்படுத்துங்கள்.