Timeless

இதுல அப்படி என்ன இருக்குனு இவ்வளவு விலை? இது சாதாரணமா எல்லா ஊரிலும் கிடைக்குமே! இந்த ஒரு இடத்தில் என்ன சிறப்பு

Apr 30 2021 10:04:00 AM

உலகம் முழுவதும் கிடைக்கும் முக்கியமான பொருள்களில் தேனும் ஒன்றாகும். இயற்கையான இனிப்புசுவை கொண்ட தேன் மிக ஆரோக்கியமானதாகும். மேலும் பல மருத்துவ குணங்களும் இதில் உள்ளது. கரும்புகள் உற்பத்தி செய்வதற்கு முன் மிக பிரதானமான இனிப்பாக தேன் பயன்படுத்தப்பட்டது.

turkish-honey

கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளாக தேனீக்கள் பூமியில் வாழ்ந்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. பைபிள் மற்றும் குரானில் கூட தேன் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் தேன் அளப்பரிய பங்கை கொண்டுள்ளது. இதனுடைய தனிச்சுவை காரணமாக இதை கடவுளின் உணவு என்று கூட கூறலாம். கரடிகளுக்கு மிக பிடித்தமானது தேன்.

turkish-honey

அனைத்து நாடுகளிலும் தேன் கிடைத்தாலும் துருக்கி நாட்டில் உள்ள மலைக்குகை பகுதியில் இருந்து கிடைக்கும் தேன் மிக விலைமதிப்பு மிக்கதாக இருக்கிறது. 2500 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்படும் இது உலகிலேயே மிக அதிக விலை கொண்ட தேன் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த தேன் இங்கிருந்து பெறப்படுகிறதாம். மிக அரிய வகை தேன் என்று சொல்லப்படும் இதன் விலையை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. 1 கிலோ சுமார் 7.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால் இது எவ்வளவு சுவையாக இருக்கும் என்று யோசிக்க தோன்றுகிறது.