#GIFTINGMALES: ஆண்கள் மட்டும்தான் வாங்கித் தர வேண்டுமா??? ஆண்களுக்கு GIFT கொடுத்தால் ரொம்பப் பிடிக்கும்!!!
  • 21:52PM Sep 23,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:52PM Sep 23,2019 Chennai

பொதுவாக COMMITTED என்றாலே பெரும்பாலான செலவு ஆண்களின் தலையில்தான் விழும். இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பெண்கள் எனக்கு இது வேண்டும் என்று பார்த்த உடனேயே கேட்டு விடுவார்கள். ஆண்கள் அப்படி இல்லை, நிறையக் கணக்குப் போட்ட பின்னர்தான் வேண்டுமா, வேண்டாமா என்று யோசிக்கவே ஆரம்பிப்பார்கள். இதனால், வாங்கிக் கொடுக்கும், காதலியோ, மனைவியோ அமைந்தால் கூட, சீக்கிரத்திலேயே இது ONE-SIDE ஆக மாறிவிடுகிறது. அதாவது, பார்ப்பதற்கு ஆண்கள் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பது போன்ற IMAGE ஏற்பட்டு விடுகிறது.

இரண்டாவது ஆண்களே ஏற்படுத்திக் கொள்ளும் EGO சிக்கல். பெண்களிடம் பழக ஆரம்பிக்கும் போது பந்தாவாக SCENE போட நானேதான் PAY பண்ணுவேன் என்று VOLUNTEER ஆக, நல்ல பெண்களையும் கெடுத்துப் பேயாக்குவதும் ஆண்கள்தான். இதெல்லாம் விடப் பெரிய காரணம் ஒன்று இருக்கிறது. குடும்பத்தில், அக்காவோ, தங்கையோ இருந்தால், அந்த ஆண்களுக்கு எனக்கு வேண்டும் என்று கேட்டும் எண்ணம் கூட இருக்காது. காரணம், சிறு வயதில், பெண்கள் திருமணத்திற்கு நகை சேர்த்து வைக்கிறேன் என்று பெண்ணுக்குத் தங்கத் தோடும், ஆணுக்கு ஜட்டியும் வாங்கிக் கொடுப்பதிலேயே அவன் அமைதியாகி இருப்பான். இதற்காக GOOGLE-ல் படங்களைத் தேடிய போதும், ரொம்ப சொற்பமான படங்கள்தான் இருந்தன.

ஆனால், உண்மையில் பெண்களை விட தனக்கு யாராவது GIFT கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கும் ஆண்கள் அதிகம். கொடுக்கும் பொருளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் போதும் என்று இருக்கும் எத்தனையோ ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பாவான பிறகு பெரும்பாலும் மனைவி, குழந்தைகளுக்கு எல்லாம் செலவழித்துவிட்டு, நானென்ன சின்னப் பையனா என்று கெத்தாகக் கேட்டுவிட்டு, தன் ஆசையை அடக்கிக் கொள்ளும் அப்பாக்கள் நிறைந்த இது. உங்கள் வீட்டில் ஒரு ஆண் இருந்தால், அவன் மனதையும் புரிந்து கொண்டு சின்னதாய் ஒரு GIFT கொடுங்களேன், பிறகு நிஜமாகவே நீங்கள் அவனுக்கு ராணியாகி விடுவீர்கள்!!!

Romantic Gift Suggestions  |  Gifting Weapons  |  Valentines Day Gift  |  A Beautiful Gift  |  Wow Gifts  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top