ஆமையும் தமிழனும்-மறைத்தும்,மறுத்தும்,அழிக்கப்படும் சில உண்மைகள்!!
  • 10:20AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 10:20AM Sep 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

ஆமை பற்றி நாம் எங்குக் கேட்டாலும் நமக்கு முதலில் ஞாபகம்  வருவது நமது வீட்டில் நம் முன்னோர்கள் கூறியதாக கூறும் பழமொழி தான்."ஆமை புகுந்த வீடு விளங்காது" இது யார் கூறினார்கள் எந்தக் காரணத்திற்காக கூறினார்கள் என்று அறியாமலே அதை நம்பிக்கொண்டு உள்ளோம் ..ஆனால் அதற்குக் காரணம் தெரியாமல் தங்களுக்கு சாதகமாக சிலர் அந்தப் பழமொழியை மாற்றிக்கொண்டு நம்மையும் நம்பவைத்துவிட்டார்கள்..

pjimage (11).jpg

 

ஆமை என்று குறிப்பிடுவது சனி பகவானை..சனிக்குத் தமிழ் மொழியில் காரி என்று பொருள் அதாவது மெதுவாகச் செல்லும் பொருளைக் காரி என்று குறிப்பிடுவார்கள்..சனி கிரகணம் மெதுவாகத்தான் சுற்றிவரும்,ஆமையும் மெதுவாகவே செல்லும்..எனவே இலக்கணத்தை நன்கு அறிந்த நமது தமிழ் சான்றோர் உவமை அணி மூலமாக அந்தப் பழமொழியை விளக்கினார்...இதை அறியாத மூடர்கூட்டம் பழமொழியை தலைகீழாக மாற்றிவிட்டனர்..

Chola_dynasty_map_-_Tamil.png

அதெல்லாம் சரி ஆமைக்கும் தமிழனுக்கும் என்ன சம்மந்தம் என்று தோன்றுகிறதா?? நாம் அறிந்தும் மறந்த சில குறிப்புகள் மற்றும் கசக்கும் உண்மைகள்  உங்கள் பார்வைக்கு...ஒரு நிலப்பரப்பில் இருந்து நீரின் மூலமாகப் பல தொலைவில் உள்ள மற்றொரு இடத்திற்குச் சென்று வாழும் ஒரே உயிரினம் இந்த ஆமைகள் தான்..இவை போல் தான் நம் தமிழனும்..ஆமைகளின் பெருங்கடல் பயணங்களை அறிந்த தமிழன், அந்த அடிப்படையைக்  கொண்டு  பெருங்கடல் பயணத்தின் மூலமாக உலகின் பல இடங்களுக்கு தமிழினம் சென்று பல நாட்டு  மக்களுடன் வியாபாரம் செய்தனர்..சில நாடுகளில் ஆட்சியும் செய்தனர்!

main-qimg-1976c13574a97e5a7a705ae4321d439d.png

 

 ஒரு பெரும் அழிவு ஏற்பட்டால் அதில் இருந்து காப்பாற்றக்கூடிய ஒரே உயிரினம் ஆமை..இதைத் தமிழன் அறிந்ததால் தான் ஆமைகளை உயிரென மதித்தான்..முக்கியமான காரணம் ஆமைகளால் டெல்லூரிக் () நிலத்தடி மின்னோட்டம் என்று இன்றைய விஞ்ஞானிகள்  கூறப்படும் கடலடி நீரோட்டத்தை ஆமைகளின் மூலம் தமிழன் அறிந்து கப்பல்களை அந்த நீரோட்ட பாதையில் செலுத்திப் பல நாடுகளுக்குச் செல்லும் வழிகளை வகுத்தறிந்தான்..இன்றைய விஞ்ஞானிகளால் கூட அவ்வளவு துல்லியமாக அறியமுடியாத இந்தக் கடலடி நீரோட்டத்தை எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலங்களிலே  செல்ல முடியாத பல துருவங்களைச் சென்று வென்று சாதித்து உள்ளனர்!!

pjimage (12).jpg

 

ஆமைகள் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் அதன் இனம் உருவான பிறப்பிடத்துக்கு வரும்...முட்டைகள் இட்டு குஞ்சி  பொரித்து பின் தன்னுடன்  கூட்டிச்செல்லும்...காலங்கள் பல மாறினாலும் இன்றும் ஆமைகள் இதைப் பின்பற்றுகின்றன.அதில் குறிப்பிடக்கூடிய சில ஆமை இனம்  பங்குனி சித்தாமைகள்,பச்சை ஆமை,ஏழுவரி தோனி ஆமை..இவை ஆதி தமிழன் ஆண்ட காலத்திலிருந்து இன்று வரை இனம் பெருக்க செய்ய நம் தமிழகம் வருகின்றன..இவற்றின் ஆற்றல்களை வைத்துத்தான் கடல் பயணத்தை சுலபமாக நம் முன்னோரால் கணிக்க முடிந்தது. இங்கு வந்து இறந்த ஆமைகளுக்கு நம் தமிழ் மக்கள் கோயில் கட்டி,ஊர்களுக்குப் பெயர் சுட்டியும் பெருமை படுத்தி உள்ளனர்..

pjimage (14).jpg

 

அப்படிப்பட்ட இந்த இரு இனத்தின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்..!! காலங்கள் கடந்து நிற்கும் நம் தமிழ் மொழி பலரால் அழிக்கப் படுகிறது..ஆமை முட்டைகள் சாப்பிட  நமது மக்களே அதை வடநாட்டுக்கும்,அண்டைநாடுகளுக்கும் விற்றுவிடுகின்றனர்...தமிழில் பேசினால் சற்று குறைத்து பார்ப்பதும் மற்ற மொழிகளைப் பேசினால் பெருமைப் படுத்துவதும் சிலர் செய்துகொண்டுதான் உள்ளனர்..நமது பல உண்மைகள் கடலுக்கு அடியிலும்,சாம்பல் மண்ணாகவும் போய்விட்டது.தோண்டி எடுக்கப்பட்ட முக்கிய உண்மைகளும் மீண்டும் பலரின் சூழ்ச்சிகளால் அந்த உண்மைகள் மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டன.இதைக்கேட்க யாரும் முன்வரவும் இல்லை,அழிந்துகொண்டு இருக்கும் இந்த இரு இனங்களையும் பற்றி கவலைப்பட சிலரை தவிரப் பலர் கண்டுகொள்வதும் இல்லை!.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top