தினகரனுக்குத் தொப்பி மறுக்கப்பட்டதன் அதிர்ச்சியூட்டும் பின்னணி!!!
  • 11:15AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 11:15AM Dec 06,2017 Chennai, Tamil Nadu 600003, India

     பொதுவாக சுயேச்சையாகப் போட்டியிடும் போது அவர்கள் விரும்பும் சின்னங்கள் வேறு சுயேச்சைகளுக்கு தேவை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கே வழங்கப்படுவது வாடிக்கை.  அப்படியிருக்க, எதற்காகத் தினகரன் போட்டியிட விரும்பும் தொப்பி சின்னத்திற்கு, இரட்டை இலை சின்னம் என்ற பிரபலமான சின்னம் இருந்தும் ஆளுங்கட்சித் தரப்பு தடை சொல்ல வேண்டும்.  அப்படி என்னதான் இருக்கிறது தொப்பி சின்னத்தில்???

       சென்ற முறை இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில், RK நகர் தொகுதியில் தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் மற்ற எம்.எ.ஏக்கள் அனைவரும் இதே சின்னத்தில் பிரச்சாரம் செய்தது நினைவிருக்கலாம்.  அந்தத் தேர்தல் வருமான வரிச் சோதனையில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து எடுத்த ஒரு பட்டியலின் அடிப்படையிலும், பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த புகார்களின் அடிப்படையிலும் ஒத்தி வைக்கப்பட்டது.  பிறகு, தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் மீண்டும் நிகழும் போது தினகரன் தொப்பி தான் வேண்டுமென்று கேட்க அதைத் தடை செய்யும் நோக்கத்தில்தான் இருக்கிறது சூட்சமமே.

       பொதுவாக ஓட்டுக்குப் பணம் கொடுப்பவர்கள், வாக்காளர்களிடம் சத்தியம் வாங்குவது வழக்கம்.  அதன்படி ஏற்கெனவே பணம் கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அந்த வாக்குகள் தொப்பி சின்னத்திற்கு விழுந்தால் என்ன ஆவது என்ற கவலைதான் தற்போது தொப்பி சின்னம் முடக்கப்பட்டிருக்கும் இரகசியமே.  வேறு சின்னத்தில் தினகரன் போட்டியிட்டால் அப்போது அவருக்கு அந்த Benefit கிடைக்காது.  இதன் காரணமாகவே தொப்பி சின்னம் முடக்கப்பட்டிருந்தும், ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து Showcause நோட்டீஸ் விடப்பட்டிருக்கிறது.  எக்காரணம் கொண்டும் தொப்பி மட்டும் தலை மாறி விடாமல் பார்த்துக் கொள்வதில் உள்ள அக்கறைதான் சத்தியமாக மெய்சிலிர்க்க வைக்கிறது. என்னத்த சொல்ல…

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top