வேஷங்களில் மெய்யில்லை..
  • 06:48AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 06:48AM Oct 24,2017 Chennai, Tamil Nadu 600003, India

காதலைப் பற்றி இன்றுள்ள இளைஞர்களிடம் கேட்டால் பல கதைகள் கூறுவார்கள்.இன்றைய தலைமுறைகளில் காதல் ஒரு கவர்ச்சி பொருளாக மாறிவிட்டது போல் தோன்றுகிறது.இதனால் தான் என்னவோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் காதலின் மேல் உள்ள ஈர்ப்புக் குறையத் தொடங்குகிறது.இப்படி முறிந்த பல காதல் கதைகள் நாம் கேட்டிருப்போம் ஏன் நேரிலும் பார்த்திருப்போம்.இது அனைவருக்கும் பொது என்று கூற முடியாது காதலுக்கான புரிதலை உணர்ந்து வாழும் பலர் இருக்கின்றனர் ஆனால் சற்று குறைவு.அப்படிப் பட்ட சிலருள் என்னைப் பதித்த ஒரு காதல் கதை...

This Love Story Of A Sex Worker And A Disabled Beggar Proves True Love Can Blossom Anywhere

பங்களாதேஷில் நடந்த ஒரு உணர்வுப்பூர்வமான ஒரு நிகழ்வு.ரஜியா பேகம் சிறு வயதில் இருந்தே விபச்சாரத்தில் ஈடுபடுத்த பட்டுள்ளார்.பல கொடுமையை அனுபவித்து வந்த அவர் பலமுறை அந்த இடத்தில் இருந்து வெளியேற முயற்சித்துள்ளார் ஆனால் முடியவில்லை.அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்தக் குழந்தைக்காக வாழ்வதாக அவர் பலமுறை புலம்பியிருக்கிறார்.இப்படிப் பட்ட நிலையில் தான் அப்பாஸ் மீயான் அவர் வாழ்க்கையில் வந்துள்ளார்.

Rajiya and Abbas story by GMB Akash

அப்பாஸ் மீயான் ஊனமுற்றவர்.அவருடைய ஊனத்தால் அவரின் முதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.சக்கரநாற்காலியில் சென்று பிச்சை எடுத்து வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.அப்படிப் பட்ட நிலையில் அவர் ரஜியாவை சந்தித்துள்ளார்.சாலையில் நின்றுகொண்டிருந்த அவருக்கு இவர் 50 டக்கஸ்(பங்களாதேஷ் ரூபாய்) கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

Rajiya and Abbas story by GMB Akash

இதுவரை தன்னிடம் எதிர்பார்ப்புடன் பலர் பணம் கொடுத்துள்ளனர்.ஆனால் எந்த எதிர்பார்ப்பின்றி அவருக்கு உதவியவர் அப்பாஸ் என்பதாலோ ரஜியாவிற்கு அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.அவரைச் சந்தித்த இடத்தில் அவருக்காகப் பல நாட்கள் காத்திருந்துள்ளார்.

 ஒரு நாள் அவரைச் சந்தித்த அவர் அப்பாசிடம் "நான் மீண்டும் ஒருவரைக் காதலிக்க முடியாது ஆனால் என் வாழ்நாள் வரை உங்களுடைய சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு இருப்பேன் "என்றுள்ளார்.அதற்கு அப்பாஸ்"காதல் இல்லாமல் கடைசி வரை யாராலும் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டிருக்குஞ் முடியாது "என்றுள்ளார்.இருவரும் தங்களின் காதலை எளிமையாக வெளிப்படுத்தினர்.

இருவருக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.ரஜியாவின் மகளைத் தான் மகளைப் போல் வளர்த்து வருகிறார்.ஒரு சிறிய வீட்டில் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.பல நாள் உணவின்றி வாழ்ந்துள்ளனர் ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர்களே கூறுகின்றனர்.

இன்று நான் பார்த்த பல காதலர்களுக்கு மத்தியில் இவர்களின் காதல் உயர்ந்தே இருக்கிறது.இருவருக்குமான புரிதலே உண்மையான காதல் என்பதை இவர்கள் நமக்குப் புரிய வைக்கின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top