Timeless

கற்பனை செய்யும் அனைத்தும் நிஜத்தில் நடக்குமா? கற்பனையை விஞ்சும் விஷயமெல்லாம் சில நேரங்களில் நிஜ வாழ்க்கையில் நடப்பதை கவனித்துள்ளீர்களா?

Sep 10 2021 09:51:00 AM

கற்பனை செய்யுங்க. கனவு காணுங்க. இதெல்லாம் நம் அப்துல் கலாம் அய்யாவின் வாக்கு. அந்தக்கனவை நாம் காணுகிறோமா என தெரியவில்லை. ஆனா உலகத்துல இருக்குற எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் கனவு கண்டு வித்தியாசமான படைப்புக்களை உருவாக்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். அப்படி ஒரு வித்தியாசமான படைப்பை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

la-balad-des-genomes trojan-horse-room

கட்டிடக் கலைஞர் நோயல் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வித்தியாசமான ஹோட்டல் தான்  லா பலேட் டெஸ் க்னோம்ஸ். பார்த்தவுடனே உங்களை வசீகரிக்கும் 10 வினோதமான அறைகள் கொண்ட அசாதாரண ஹோட்டல் தான் இவரது கலைப்படைப்பாகும். உண்மையில் இந்த ஹோட்டலின் குறிக்கோள் "நீங்கள் கற்பனை செய்யக்கூடிய அனைத்தும் உண்மையானவை" என்ற கருத்தை வலியுறுத்துவதே ஆகும்.

la-balad-des-genomes trojan-horse-room

இந்த வித்தியாசமான ஹோட்டல் பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் 10 அறைகளும் 10 விசித்திரமான கதைகளை அடிப்படையாக கொண்டுள்ளது. புதுமையான வடிவமைப்புகளை வைத்து மக்களை ஈர்ப்பதே இவர்களுடைய நோக்கமாகும்.

la-balad-des-genomes trojan-horse-room

ஒரு ட்ரோஜன் குதிரை போன்ற அமைப்பு இங்கு காணப்படுகிறது. ஒரு பெரிய மரக் குதிரை போன்று இந்த வடிவமைப்பு உள்ளது. இங்கிருக்கும் 10 அறைகளில் இந்த குதிரை வடிவமைப்பை கொண்டுள்ள அறைக்குத்தான் அதிக மவுசு என்று கூறப்படுகிறது.

la-balad-des-genomes trojan-horse-room

மீதமுள்ள அறைகளில் மேக்வாரி தீவு அறை குறிப்பிடத்தக்கது என்று கூறலாம். அங்கு உங்கள் படுக்கை உண்மையான நீரில் மிதப்பது போல் தோன்றும் ஒரு படகு மற்றும் உண்மையான மணலுடன் கூடிய ஒரு கடற்கரை உள்ளது.

la-balad-des-genomes trojan-horse-room

லண்டனில் வசிக்கும் நண்பன் ஒருவன் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். அவன் எப்படியும் வருடத்துக்கு இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறான்.கொரோனா வருவதற்கு முன்பு அவன் கடைசியாக பெல்ஜியம் நாட்டுக்கு தான் சுற்றுலா சென்றுள்ளான். அப்போது இந்த விசித்திரமான ஹோட்டலுக்கு சென்று மரக்குதிரை அறையில் இரண்டு நாட்கள் தங்கியுள்ளான். உண்மையாகவே இது மிகவும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்ததாக அவன் கூறினான். காசு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் இந்த வித்தியாசமான அனுபவத்துக்காக எவ்வளவு வேணாலும் செலவழிக்கலாம் என்பது அவனுடைய கருத்தாக உள்ளது.