Timeless

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்த தேடுதல் வேட்டை! வரலாற்று சிறப்புமிக்க அற்புதமான பயணத்தில் அவர்கள் கண்டுபிடித்தது என்ன?

Jun 07 2021 08:06:00 AM

இந்தியாவை கடல் மார்க்கமாக எப்படி அடைவது என்று ஐரோப்பிய நாடுகள் யோசித்து கொண்டிருந்த காலம் அது. இயற்கை வளம், வாசனை திரவியங்கள் போன்றவற்றை தரை வழியாக எடுத்துச்செல்வதில் சிரமம் இருந்ததால் கடல் வழியே பயணிக்க திட்டமிட்டனர் ஐரோப்பியர்கள். இந்தியாவுக்கான கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க புறப்பட்ட பலரில் ஒருவர் தான் வாஸ்கோடகாமா.

treasure-hunt-latest

1497ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி லிஸ்பன் நகரிலிருந்து வாஸ்கோடகாமா தலைமையில் 170 பேர் கடல் பயணத்தை மேற்கொண்டனர். பயண வழியில் இடையில் மொசம்பிக், மொம்பாசா, மாலிண்டி ஆகிய இடங்களில் நிறுத்தி சிறிது ஓய்வெடுத்து அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். இந்தியாவுக்கான கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க வாஸ்கோடகாமா தலைமையிலான குழுவுக்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் தேவைப்பட்டது. ஒரு வழியாக 1498ம் ஆண்டு மே 20ம் தேதி கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அந்த குழுவினர் வந்து சேர்ந்தனர்.

treasure-hunt-latest

இந்தியாவுக்கான கடல் வழிப்பாதையை கண்டுபிடிக்க ஏராளமானோர் இதற்கு முன் புறப்பட்டிருந்தாலும் முதலில் அதில் வெற்றியடைந்தவர் வாஸ்கோடகாமா. இவர் கண்டுபிடித்து 5 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கான பாதையை கண்டுபிடிக்க புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார். தன்னுடைய பயணத்தின் இடையே தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடியுள்ளார் வாஸ்கோடகாமா. பிறகு மொசாம்பிக் தீவை அடுத்துள்ள மொபாசாவில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவரை சந்தித்தார். இதன் மூலமே இந்தியாவுக்கு செல்லும் வழியை இவர் உறுதிப்படுத்திக்கொண்டு புறப்பட்டார்.

treasure-hunt-latest

கடல் வழியாக இந்தியாவை அடைந்த முதல் ஐரோப்பியரான வாஸ்கோடகாமா இந்தியாவில் இருந்து மளிகை பொருட்கள் மற்றும் உடைகளை போர்ச்சுக்கலுக்கு ஏற்றுமதி செய்தார். இதன் பிறகு இந்தியாவுடன் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் கடல் மார்க்கமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக கோழிக்கோட்டுக்கு வந்திறங்கி கிட்டத்தட்ட 523 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.