ஆவியுடல் பயணம் உண்மையா....???
  • 04:53AM Sep 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 04:53AM Sep 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

நம்முள் பலருக்கு விடை தெரியாத கேள்விகள் பல அவற்றுள் சில அறிவியலுக்கும் அப்பார் பட்டவை அதில் ஒன்று . அஸ்ட்ரால் ப்ரொஜெக்ஷன் எனப்படும் ஆவியுடல் பயணம். ஆவியுடல் பயணமென்பது "ஒருவன் தன் உடலை விட்டு வேறு உலகை நோக்கிப் பயணிப்பதாகும்" பண்டைய காலத்தில் பல மக்களால் நம்பப்பட்ட ஒரு வினோத பழக்கம்."ஆன்மா என்பது ஒருவனின் உயிர் அல்ல ஒரு வாகனம் "என்று எகிப்து மக்களால் நம்பப்பட்டது.


இப்பழக்கத்தைப் பற்றி குரானிலும் குறிப்பிட பட்டுள்ளது முகமது நபி அவர்கள் இஸ்ராவின் வாழ்க்கையில்ஆவியுடல் பயணம் செய்ததாக சான்று கூறப்படுகிறது.


இப்பழக்கம் ஹிந்து மதத்திலும் குறிப்பிட பட்டுள்ளது . யோகி ராமச்சக்ரா அவர்கள் இப்பயணத்தைப் பற்றி கூறியிருக்கிறார்
.அவர் கூறுகையில் ஆவியுடல் பயணம் என்பது சாத்தியமே "ஒருவன் இந்த உலகின் புவியிருப்பு உள்ளவரை எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்,இக்கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவன் எந்த எல்லை வரையும் பயணிக்கலாம் ",இவ்வாறு அவர் கூறுகிறார். ஆவியுடல் பயணம் செய்ததாகக் கூறும் பலர் தங்களின் உறக்கத்தில் தான் இப்பயணத்தை மேற்கொண்டதாகக் கூறுகின்றனர்.


நியூட்டன் மூன்றாம் விதியை போல ஒவ்வொரு கருத்திற்கும் எதிர்க்கருத்து உண்டு அதைப் போல இப்பயணத்தைக் குறித்து பல முரணான கருத்துக்களும் உண்டு.ஆவியுடல் பயணம் பற்றி பல கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும் பலர் முரண்படுகின்றனர். பல கருத்துகள் எழுந்தாலும் பதில் தெரியாத பல கேள்விகளுள் ஒன்றாக இருக்கிறது.
ஆவியுடல் பயணம் குறித்து சிலர் கூறிய வேடிக்கையான பதிவுகள்….https://www.youtube.com/results?search_query=real+life+experience+for+astral+projection

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top