பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு ஆண் குழந்தை பிறந்தது! மண்டையைக் குழப்பும் விசித்திர செய்தி!
  • 12:30PM Mar 08,2019 Texas
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:30PM Mar 08,2019 Texas

அமெரிக்காவில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தி மருத்துவ வரலாற்றில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது! அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான் அண்டோனியோ பகுதியைச் சேர்ந்தவர் வைலே சிம்ப்சன். பிறப்பால் பெண்ணாகப் பிறந்த இவர், தனது 21 வயதில் தனது மாற்றத்தை அறிந்து ஆணாக மாறியுள்ளார்.

Image result for Wyley Simpson

அறுவை மாற்றுச் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய வைலே சிம்ப்சன், தற்போது அவரது கணவர் ஸ்டீபன் கீத் உடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இவர்களின் இல்லறவாழ்வில் சந்தோஷத்தையும், மருத்துவ உலகில் ஆச்சர்யத்தையும் உண்டாகும் விதமாக இவர் கருவுற்றுள்ளர். சிம்ப்சனுக்கு அறுவை மாற்றுச் சிகிச்சை முடிந்ததில் இருந்து மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது. அவருக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் அடித்துக் கூறினார்கள். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் சிம்ப்சன் கருவுற்றார்.

Image result for Wyley Simpson

தாடி,மீசையுடன் இருக்கும் சிம்ப்சன் கர்ப்பமாகி வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவின. ஏராளமான மக்கள் இவர்களை மனவருத்தம் அடையும் அளவுக்குக் கலாய்த்தனர், ஆனால் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் குழந்தை பிறக்கப்போகும் சந்தோஷத்தில் சிம்ப்சன்-ஸ்டீபன் தம்பதியினர் இருந்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சிம்ப்சன் தனது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது அவர்களின் 6 மாத குழந்தையுடன் சிம்ப்சன்-ஸ்டீபன் தம்பதியினர் சந்தோசமாக வசித்து வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top