திருநங்கைகள்!!!
  • 12:09PM Nov 20,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 12:09PM Nov 20,2017 Chennai, Tamil Nadu 600003, India

     நான் ஒரு சமூக சேவகன்.  முழு நேரம் இல்லாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்வது வழக்கம். தாய் என்ற அமைப்புடன் தொடர்பு கிடைத்தது.  அதன் மூலம் கோவையைச் சுற்றியுள்ள நிறைய அரவாணிகளுக்கு எங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறோம். உண்மையில் இந்தத் தாய் என் அமைப்பு மிகவும் பெரிது.  கோவையைச் சேர்ந்த சில திருநங்கைகளுக்கு சமையல் சொல்லிக் கொடுத்து, சமையல் வேலைக்கு அனுப்பி வைக்க, இன்று அவர்கள்தான் கோவையில் பெஸ்ட் பிரியாணி.  அத்தனை சுவையும் தரமும் மக்களை விரைவிலேயே அவர்களுக்கு இரசிகர்களாக மாறிப் போனார்கள். 

அப்போதுதான் எனக்கு அந்தப் பெண் அறிமுகமானாள்.  பார்க்க அத்தனை லட்சணம், குணம் இருந்தாலும், ஏதோ ஒன்று சரியில்லை என்று அடிக்கடி தோன்றும்.  ஒருநாள் அவளே, திருநங்கைளை கண்டு பயமோ, அருவெருப்போ படாமல் அக்கா, தங்கை, அம்மா என்று கூப்பிட்டு நான் பேசுவதால்தான் என்னைப் பிடித்திருக்கிறது என்றும் சொன்னாள்.  அன்று நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டே தன்னைப் பற்றியும் சொன்னாள்.  அவளும் ஒரு திருநங்கைதான்.  பெண்ணாக இருந்தாலும், ஆணைப் போன்ற பழக்கவழக்கங்கள் விருப்பு வெறுப்புகள் என்று அனைத்தும் உண்டு.  கேட்டதும் நான் சிரித்தபடி, சரிடா தம்பி என்று சொல்ல, அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி.

வீட்டுக்குத் தெரியாமலே அவள் சமூக சேவை விஷயமாக, வந்து செல்வது வழக்கம்.  நாங்கள் நல்ல நண்பர்களானோம்.  அவனுடன் இருக்கும் போது, பெண் என்று கூட நினைக்கத் தோன்றாது.  பேச்சும் செய்கையும் முழக்க அப்படித்தான் இருக்கும். எனக்குச் சென்னையில் வேலை கிடைத்து சில காலம் சென்னை வந்து வேலை செய்து கொண்டிருந்தேன்.  மெயிலில் மட்டும் தொடர்பிலிருந்தோம்.  திடீரென்று ஒரு நாள் உடனே கிளம்பி வரச் சொல்லி அவன் கூப்பிட, வேலை இருந்ததால் 2, 3 நாட்கள் கழித்துதான் ஊருக்குத் திரும்ப முடிந்தது.  ஊருக்குத் திரும்பி வந்து அவனைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கிடைக்கவில்லை. சில நாள் கழித்து அவனைச் சேலையில் கடைவீதியில் பார்த்த பொழுது, என்னால் நம்ப முடியவில்லை.  காரணம், அவளுக்குத் திருமணம் ஆகியிருந்தது. 

நான் ஊருக்குப் போகும் முன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தான்.  ப்ரபோஸ் செய்யப் போய், அந்தப் பெண் அவள் வீட்டில் ஒரு பெண் தனக்குப் பிரபோஸ் செய்ததைச் சொல்லி இவன் வீட்டில் விஷயம் தெரிந்து உடனடியாக கல்யாண ஏற்பாடு செய்து விட்டனர்.  சரி, இதற்கு மேல் என்ன செய்வதென்று அமைதியாக இருந்து விட்டேன்.  வாரம் ஒரு முறை என்னிடம் வந்து அழுவாள்.  ஒரு ஆண் தன்னைத் தொடும் போது கேவலமாக இருக்கிறது என்று அழ என்னால் ஆறுதல் மட்டும்தான் சொல்ல முடிந்தது.  இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் பொறுக்க முடியாமல் அவன் வீட்டில் சொல்லப் போய், அவர்கள் என்னையும் வீட்டுக்கு வரவேண்டாம் என்று துரத்தி விட்டனர். 

சில நாட்களிலேயே அவள் சூசையிட் செய்து கொண்டாள்.  சில வருடங்கள் கழித்து ஒரு கருத்தரங்கில் பேசும் போது அவளைப் பற்றிச் சொல்லி, பெண்ணிலிருந்து ஆணாக வாழ்பவர்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்க, பெண்கள் ஆண்களைப் போல வீட்டை விட்டு சுலபத்தில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள், அதனால் எங்களால் எதுவும் சொய்ய முடியவில்லை என்று சொன்னார்கள்.  தற்போது வெளிப்படையான விஷயமாக மாறிவிட்டாலும் அந்தக் காலத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன்தான் இருந்தது.  நான் பேசும் போதுதான் நிறையப் பேருக்கு இந்தத் தகவலே தெரிய வந்திருக்கிறது.  என்ன ஆண் பிள்ளையைப் போல வீட்டை விட்டுத் துரத்தத் தயங்கினாலும் இவர்களையும் புரிந்து கொள்ள ஆள் இன்றி உடனடியாகத் திருமணம் செய்து அவர்களை மேலும் இக்கட்டில் தள்ளி விடுகிறார்கள்.

ஒருவேளை நான் சொன்னதை அவன் வீட்டில் அவன் பெற்றோர்கள் கேட்டிருந்தால் நான் ஒரு மிக அழகான நண்பனை இழந்திருக்க மாட்டேன்… என்ன செய்ய…              

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top