பெண்ணிலிருந்து ஆணாக மாறிய ஆரவ்!!!
  • 07:10AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 07:10AM Nov 11,2017 Chennai, Tamil Nadu 600003, India

மும்பையில், பெண்ணிலிருந்து ஆணாக மாறிய ஒரு ஆண், ஆணிலிருந்து பெண்ணாக மாறி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இருக்கிறார்.  இது விசு பட டயலாக்கும் இல்லை, மப்புல வர்ற உளறலும் இல்லை. உண்மையிலேயே நடந்த ஒரு காதல் திருமணம்தான் இது.  ஒரு வித்தியாசமான லவ் ஸ்டோரி!!!

கேரளாவில் பிறந்த ஆரவ் அப்புக்குட்டன் உண்மையிலேயே ஒரு பெண். 13 வயது வரை மற்ற பெண்கள் போலவே பெரிய தலைமுடியுடன் பெண்ணாக ஸ்கூலுக்குப் போய் வந்தவர், பெண்களுடன் அமரும் போது அவர்கள் மீது இவருக்கு உடல் ரீதியான ஈடுபாடு வரத் துவங்க, அவசரமா டாக்டர் கிட்ட போய் செக்கப் பண்ணும்போதுதான் இவர் மனசளவில ஒரு ஆண்கிற விஷயம் தெரிஞ்சிருக்கு.  ஆணாக மாறிடலாம்னு முடிவெடுத்தப்போ டாக்டர் கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்லியிருக்காரு.  தன்னோட இந்தக் குறை வெளிய தெரியக்கூடாதுன்னு சமாளிக்கிறதுல ஏற்பட்ட டென்ஷன்ல 10வது படிக்கும்போது மயங்கி விழுந்திருக்காரு. 

அம்மா தவறிப் போக, அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க, வீட்டை விட்டு வெளிய வந்த ஆரவ் தன்னோட 45 வயசுல ஆணாக மாறினாரு.  ட்ரீட்மெண்ட் எடுக்க ஆரம்பிச்ச கொஞ் நாள்லயே முடி கொட்டி, ப்ரொடீன் டயட் எல்லாம் சாப்பிட்டு இப்போ பார்த்தா யாரும் அவரு பெண்ணுன்னு சத்தியம் பண்ணினாக் கூட நம்ப மாட்டாங்க… மீசை தாடியெல்லாம் கூட வளர்ந்திருக்கு… ஒரு சமயம் தற்செயலா போனில் பேசிட்டிருக்கிற சுகண்யா கிருஷ்ணாங்கற 22 வயசு பையன்கிட்ட பேச ஆரம்பிச்சிருக்காரு. போன் நம்பர் வாங்கிப் பேசிப் பழகும்போதுதான் தெரிஞ்சிருக்கு, அவங்க பையனாப் பொறந்திருந்தாலும் மனசளவுல பெண் அப்படின்னு. அப்புறம் என்ன அவங்களும் அதே க்ளனிக்ல போய் பெண்ணா மாறிட்டாங்க.

உண்மையாகவே அந்த டாக்டரு க்ரேட். ரெண்டு பேரு போட்டோ பார்க்காம கல்யாணத்துக்கு போனா நமக்கு விஷயமே தெரிஞ்சிருக்காது.  இப்போ இந்த லவ் ஜோடி சமீபத்துலதான் கல்யாணம் பண்ணி கணவன் மனைவியா வாழ ஆரம்பிச்சிருக்காங்க… நம்மளும் மனசார கொஞ்சம் வாழ்த்தலாமே!!!  என்னது உண்மைப் பேரா??? அதான் மாறிட்டாங்க இல்லை, இனி எப்பவுமே அவரு ஆரவ்தான், அவங்க சுகண்யாதான்…  (நன்றி : freepressjournal.com) 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top