#TRADITONALRECIPE: KERALA-வில் மட்டுமே செய்யப்படும் PINEAPPLE மோர்க்குழம்பு!!! செய்வது எப்படி என்று பார்ப்போமா????
  • 14:06PM Nov 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 14:06PM Nov 06,2019 Chennai

சமீபத்தில் KERALA சென்றிருந்த போது ஒரு அட்டகாசமான மோர்க்குழம்பைச் சாப்பிட நேர்ந்தது. விசாரித்துப் பார்க்கையில், அது KERALA-வில் மட்டுமே செய்யப்படும் SPECIAL PINEAPPLE மோர்க்குழம்பு என்று தெரிய வந்தது. அசத்தலான சுவையோடு ஒரு ITEM இருக்கிறதென்றால், அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி??? அதற்காகத்தான் இந்த KERALA SPECIAL TRADITION RECIPE-யை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். படித்துப் பாருங்கள்!!!

#1. தேவையான பொருட்கள்: சற்று புளித்த தயிர் - 1 CUP, PINEAPPLE - 1 துண்டு, மஞ்சள்தூள் - கால் TEASPOON, கறிவேப்பிலை – சிறிது, தேங்காய் எண்ணெய் - 2 TEA SPOON, கடுகு - அரை TEASPOON, உப்பு - தேவையான அளவு.

#2. அரைக்க வேண்டியவை: தேங்காய்த் துருவல் - 3 TABLE SPOON, பச்சை மிளகாய் – 3, இஞ்சி - ஒரு துண்டு, சீரகம் - அரை TEASPOON.

#3. மோரைக் கடைந்து, அரைக்க வேண்டிய பொருட்களை நன்கு அரைத்து, மோருடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

#4. அவற்றுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

#5. PINEAPPLE-ஐ சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிது உப்பு, எடுத்து வைத்திருக்கும் அரைத்த விழுது இரண்டையும் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிட்டு இறக்குங்கள்.

#6. பாதியளவு எண்ணெய்யைக் காய வைத்து, கடுகு தாளித்து, அதில் வேக வைத்த PINEAPPLE, கரைத்த மோர் இவற்றைச் சேருங்கள்.

#7. நன்கு கிளறிக் கொண்டே ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மீதமுள்ள எண்ணெய்யில் சிறிது கறிவேப்பிலையைப் பொரித்துச் சேருங்கள்.

#8. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Wheat Payasam   |  Egg Puff  |  Dark Chocolate  |  Cotton Seed Milk  |  Carrot Cake  |

#TRADITIONALRECIPE KERALA-வின் SPECIAL-ஆன PINEAPPLE மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டீர்களா??? PINEAPPLE சற்று இனித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் 3 பச்சை மிளகாயைச் சேர்த்துள்ளோம். அதனால், லேசாக இனிப்பு சுவை தட்டினாலும், சாப்பிட ரொம்பவே அருமையாக இருக்கும். இந்த SUNDAY உங்கள் குடும்பத்தினரை அசத்த, இன்னொரு RECIPE READY!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top