#TRADITIONALRECIPE: மருத்துவக் குணம் நிறைந்த பீர்க்கங்காய்!!! ஒன்றுக்கு இரண்டு RECIPE-கள் உங்களுக்காக!!!
  • 15:49PM Jan 19,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 15:49PM Jan 19,2020 Chennai

பீர்க்கங்காய் பெரும்பாலும் அதிகமானவர்களின் சமையலில் இடம் பெறாத காய்கறி என்று கூடச் சொல்லலாம். சிலருக்கு அதனுடைய தோல் ஒரு மாதிரியாக இருப்பதால் பிடிக்காது, சிலருக்கு அதன் சுவை பிடிக்காது. ஆனால், சரியாகச் சமைக்கத் தெரிந்தால், அனைவர் வீட்டிலும் விரும்பப்படும் பொருளாக சீக்கிரமே இடம் பிடித்துவிடும். ஆரோக்கியமான காய்கறியும் கூட. அதனால்தான் உங்களுக்காக ஒன்றுக்கு இரண்டு RECIPE-கள். பீர்க்கங்காய்த் துவையல் மற்றும் பீர்க்கங்காய் பால் கூட்டு!!!

peerkangaai.jpg

#1. பீர்க்கங்காய்த் தோல் துவையல்: தேவையான பொருள்கள்: பீர்க்கங்காய் தோல் -  1 CUP, புளி விழுது - 20 GRAM,  தேங்காய்த் துருவல் -  3 TABLE SPOON, காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் – 1 TEA SPOON, கடுகு - 1 TEASPOON, உளுத்தம் பருப்பு - ஒன்றரை TEASPOON, பெருங்காயம் - 1 சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப.

#2. பீர்க்கங்காயைக் கழுவித் தோலைச் சீவி, சின்னதாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும்.

#3. கடாயில் எண்ணெய் விட்டு, பீர்க்கங்காய்த் தோலை, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கவும்.

#4. ஆறியதும் உப்பு, புளி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும்.

#5. இறுதியாக, எண்ணெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்துச் சேர்த்துப் பரிமாறவும்.

#6. பீர்க்கங்காய்ப் பால் கூட்டு: தேவையான பொருள்கள்: பீர்க்கங்காய் - 1 CUP (சிறு துண்டுகளாக), மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - 1/2 CUP, கடுகு - 1 TEASPOON, உப்பு, எண்ணெய்தேவைக்கு ஏற்ப, பச்சைமிளகாய் - 2, சோம்பு - 1 TEASPOON, பட்டை - 1 சிறிய துண்டு, அரிசி மாவு - 2 TABLE SPOON, பால் - 1/2 CUP, சர்க்கரை - 1/2 TEASPOON.

#7. பீர்க்கங்காயை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துச் சிறிது நீர் சேர்த்து வேக விட்டுக் கொள்ளவும்.

#8. கடாயில் எண்ணெய் சிறிது விட்டு, கடுகு தாளித்து, சோம்பு, பட்டை போட்டு வதக்கி, பச்சை மிளகாய் கீறிப் போட்டுத் தாளிக்கவும்.

#9. இதில் வெந்த பீர்க்கங்காயைப் போட்டுப் பிரட்டி, அரிசி மாவைப் பாலில் கரைத்து ஊற்றவும்.

#10. இரண்டு கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும். இறக்கும் போது தேங்காய்ப் பால் இட்டுக் கிளறி இறக்கவும். பீர்க்கங்காய்ப் பால் கூட்டு தயார்.

#11. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Alternate Uppuma   |  Veg Rice Cutlet  |  Broken Wheat Payasam  |  Egg Puff @ Home  |  Paruthi Paal  |

#TRADITIONALRECIPE பீர்க்கங்காயில் செய்யப்பட்ட இந்த இரண்டையும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு எப்போது கேட்டாலும், இதைத்தான் பெரியவர்களும் சரி, குழந்தைகளும் சரி, விரும்பிக் கேட்டுச் சாப்பிடுவார்கள். உங்களுக்கும் புதிய VARIETY DISH ஒன்று கூடுதலாக READY!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top