#TRADITIONALRECIPE: நரம்புகளுக்கு வலு சேர்க்கும் ஜீவாமிர்த லேகியம்!!! செய்முறையும், மருத்துவப் பலன்களும்!!!
  • 11:43AM Oct 27,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 11:43AM Oct 27,2019 Chennai

இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைப்பது நிச்சயம் குதிரைக் கொம்புதான். காரணம், பூச்சிக்கொல்லிகளில் ஆரம்பித்து, காய்கறிகளைப் புதிதாகவும், நிறம் கூடுதலாகவும் காட்டச் செய்யப்படும் CHEMICAL TREATMENT போன்றவை. இதனால், இயல்பான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இவற்றையெல்லாம் சமண் செய்யப் பயன்படுத்தக் கூடியதுதான் இந்த ஜீவாமிர்த லேகியம். இதன் செய்முறை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

#1. தேவையான பொருட்கள்: சாலாமிசிரி பொடி, முருங்கைப் பிசின், பாதாம் பிசின், கருவேலம் பிசின் என வகைக்கு 35 GRAM எடுத்துக் கொள்ளவும்.

#2. இத்துடன் ROSE GULKAND 105 GRAM, திரிகடுக சூரணம் 35 GRAM, ஏலரிசி, நற்சீரகம், லவங்கப் பட்டை 22 GRAM, ஜாதிக்காய் 15 GRAM, பாதாம் பருப்பு வெந்நீரில் நீரில் ஊற வைத்து அரைத்த விழுது 600 GRAM, குங்குமப்பூ 6 GRAM, ஆங்கூர் திராட்சை பேரிச்சங்காய் தேவையான அளவு.

#3. நாட்டு மாட்டின் பசு நெய் அல்லது கொம்புத்தேன் தயார் செய்து, நெல்லிக்காயளவு மற்ற பொருட்களின் கலவையோடு சேர்த்து உண்ண வேண்டும்.

#4. பலவீனமான இதயம், மார்பு வலி, மலச்சிக்கல், அஜீரணம், பித்த வாயு, பசியின்மை, ருசியின்மை, மந்தம், சோம்பல், ரத்தமின்மை போன்ற அனைத்து விதமான வியாதிகளும் இதனால் குணமாகும்.

#5. உடம்பில் சுறுசுறுப்பும், நரம்புகளுக்கு வலிமையும் உண்டாகும். ஒவ்வொரு ஆண்மகனும் சாப்பிட வேண்டிய லேகியம் இது என்று சொல்லப்படுகிறது.

#6. GYM-க்கு செல்லும் வாலிபர்களுக்கு ஏற்படும் MUSCLE FATIGUE-க்கும் இது சிறந்த மருந்தாகும். எனவே, மற்ற SUPPLEMENT-களுக்கு பதில் இதைச் சாப்பிட்டால் நல்லது.

#7. வேறு பயனுள்ள இணைப்புகள்:  |  Immunity Soup Recipe  |  Chicken Shawarma Recipe  |  Dark Chocolate Recipe  |  Surakkai Adai Recipe  |  Paruthi Paal Recipe  |

#TRADITIONALRECIPE உடம்பிலுள்ள நரம்புகள் மற்றும் செயல்பாடுகள் சரியாக இயங்கும் வரைக்கும் பிரச்சினை என்பது எதுவும் இல்லை. அதற்கு உதவக் கூடியது இந்த ஜீவாமிர்த லேகியம். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்துக் கண்டதையும் வாங்கிச் சாப்பிடாமல், இது போன்றவற்றைச் சாப்பிட்டுப் பழகலாமே!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top