#adamantchild: -குழந்தைகள் என்ன அடம்பிடித்தாலும் தயவு செய்து இந்த பொம்மையை மட்டும் வாங்கி கொடுத்து விடாதீர்கள்?
  • 23:15PM Oct 11,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 23:15PM Oct 11,2019 Chennai

குழந்தைகளுக்கு வாங்கும் பொம்மைகளில் கூட என்ன பாகுபாடு என கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்களை பார்த்திருப்போம். எனது குழந்தை அழக்கூடாது,அவன் ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிற்காக குழந்தை கேட்டவுடனே வாங்கிக்கொடுப்பார்கள் ஒரு சில பெற்றோர்.இன்னும் ஒரு சிலர் குழந்தைகேட்கும் போது வாங்கி தருகையில் அதன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பார்க்கவே வாங்கி கொடுப்பார்கள்.

அப்படி வாங்கி கொடுப்பதெல்லாம் சரி, ஆனால் வாங்கி கொடுக்க கூடாத விளையாட்டு பொருள் வாள். கடந்த வருடம் வெளியாகியிருந்த வரலாற்று பின்னணி வாய்ந்த ஒரு படத்தில் கதாநாயகன் தனது வாளால் வில்லனது தலையை வெட்டும் காட்சி இடம்பெற்றிருக்கும். அது முதல் பெரும்பாலான கடைகளில் அந்த படத்தின்  ஹீரோவின் வாள்  என சொல்லி விற்பார்கள். இது என்னதான் வியாபார யுக்தியாக இருந்தாலும் குழந்தைகளின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத  தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உறவினர் ஒருவரின் குழந்தை அந்த வாளை கொண்டு விளையாடி கொண்டிருந்தது. எப்படி விளையாடுவான் என்பது தான் சுவாரஸ்யம் நிறைந்த ஒன்று.அந்த படத்தில் வருவது போலவே மற்றவர்களின் கழுத்தை குறிவைத்து வாளால் வெட்டுவது போல விளையாடுவான். பிளாஸ்டிக் என்பதால் திடீரென அந்த பொருள்   உடைந்துவிட்டது. பின்னர்  காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து கொண்டு விளையாட ஆர்மபித்தான்,அது வாள் அளவிற்கு பெரியதாக இல்லாததால் அவனுக்கு அதில் திருப்தி இல்லை,கீழே போட்டுவிட்டு வேறு தேட ஆரம்பித்தான்.சாதாரண விளையாட்டு பொருள் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா ? அவனுக்கு அந்த கத்தி  திருப்தி அளித்து வாள் வைத்து விளையாடுவது போல யாரவது கழுத்தில் வைத்தால் என்னவாகும்? இவற்றை எல்லாம் உணர்ந்து பெற்றோர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top