Rainforest

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது எப்படியெல்லாம் வித்தியாசமான செயல்களுக்கு காரணமாக அமைந்திருக்கிறது பாருங்கள்!

May 04 2021 10:07:00 AM

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் பெர்சிவல் லியுக் என்பவர் வசித்து வருகிறார். கிராபிக்ஸ் டிசைனராக வேலை பார்த்து வரும் அவருக்கு பொம்மைகள் என்றால் கொள்ளைப்பிரியம். சிறுவயது முதலே பொம்மைகள் சேகரிப்பதை தன்னுடைய பழக்கமாக கொண்டிருந்தார்.

toys-collection

5 வயதில் இவருடைய தாயார் இவரை மெக்டொனால்ட் உணவகத்திற்கு ஒருநாள் அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள ஒரு பொம்மையை இவருக்கு வாங்கி தந்திருக்கிறார். தனது தாயார் வாங்கித்ததந்த அந்த பொம்மை அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. அப்போதிலிருந்து அது போன்ற பொம்மைகளை எங்கு கண்டாலும் வாங்க ஆரம்பித்தார்.

toys-collection

அவர் வாங்கியது மட்டுமல்லாமல் அவருக்கு அன்பளிப்பாக வந்தது மேலும் நண்பர்கள் வீட்டுக்கு அல்லது ஏதேனும் விழாவிற்கும் செல்லும் சமயங்களில் அங்கு அருகில் உள்ள கடைகளில் வாங்கியது என்று பல்வேறு வழிகளில் ஏகப்பட்ட பொம்மைகள் அவரிடத்தில் சேர்ந்துகொண்டு வந்திருக்கிறது. தற்போது இவருக்கு 50 வயது ஆகும் நிலையில் இத்தனை வருடங்களில் கிட்டத்தட்ட 20000 பொம்மைகளை தன்னிடத்தில் சேர்த்து வைத்திருக்கிறார் லியுக். 2014ம் ஆண்டு இவருடைய பொம்மைகளின் எண்ணிக்கை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்பது வியப்பாக இருக்கிறது.

toys-collection

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள லியுக் தான் இதுவரை சேகரித்துள்ள பொம்மைகளை ஒரு அருங்காட்சியகம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறுகிறார். இந்த பொம்மைகளை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக அவர்களுடைய குழந்தைப்பருவ நினைவுகள் மலரும் என்றும் அவர் புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.