Lushgreen

சமீபத்திய புள்ளி விவரங்களின் படி தென்னிந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 10 நடிகைகள் யார் என்று தெரியுமா?

Jul 21 2021 12:48:00 PM

பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்து வைத்துள்ள தென்னிந்திய நடிகைகள் பலரும் பல மொழிப்படங்களிலும் நடித்து வருகின்றனர். ஓர்மக்ஸ் மீடியாவைப் பொறுத்தவரை ஜூன் மாதத்தில் தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்த தென்னிந்திய நடிகைகள் இவர்கள் தான்.

top-ten-actress south-cinema

இந்த லிஸ்டில் பாமிலி மேன் தொடரில் நடித்து பரபரப்பை கிளப்பிய நடிகை சமந்தா அக்கினேனி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மே மாதத்திலும் நடிகை சமந்தா தான் முதலிடத்தைப் பிடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. திருமணமான பிறகும் கூட தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சமந்தா முதலிடத்தில் இருப்பது ஒன்றும் புதிதல்ல.

top-ten-actress south-cinema

நம் நெஞ்சம் கவர்ந்த நடிகை காஜல் அகர்வால் ஜூன் மாத பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட காஜல் தற்போது மீண்டும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவரது கோஷ்டி என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தப்படத்தில் அவர் பேய் வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

top-ten-actress south-cinema

பாகுபலி நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மெழுகு பொம்மை போல அழகாக இருக்கும் நம்ம தமன்னா பாட்டியா நடிகை ரஷ்மிகா மந்தணாவை பின்னுக்குத்தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். கொரோனா காலத்தில் தமன்னாவின் வெப் தொடர்கள் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது.

top-ten-actress south-cinema

நடிகை ரஷ்மிகா மந்தணா இந்த தரவரிசையில் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது நம்ப முடியாத தகவலாக இருக்கிறது. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா படத்தில் நடித்து வரும் அவர் விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்துக்கு வருவது உறுதி.

top-ten-actress south-cinema

நடிகை கீர்த்தி சுரேஷ் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பிரபாஸ், விஜய் என்று மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்து வரும் பூஜா எதனால் இவ்வளவு கீழே தள்ளப்பட்டுள்ளார் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

top-ten-actress south-cinema

சமீப காலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவராக இருக்கும் ராஷி கண்ணா எப்படியோ எட்டாவது இடத்தை பெற்றுள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒன்பதாவது இடத்திலும், நடிகை சாய் பல்லவி பத்தாவது மற்றும் கடைசி இடத்திலும் உள்ளனர். கடந்த முறை எட்டாவது இடத்தில் இருந்த சாய் பல்லவி இந்த முறை கடைசி இடத்துக்கு சென்றுள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.