#Tamilcomedy:பெஸ்ட் கவுண்டமணி செந்தில் டயலாக்,கேட்டாலே கண்முன் வரும் காட்சிகள் ! 100% சிரிப்பு கன்பார்ம்
  • 20:55PM Apr 17,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:55PM Apr 17,2019 Chennai

நம்மில் பலரும் அழுத்தமாக உணரும் போது பல சமயத்தில் நமக்கு கம்பெனி கொடுப்பது தமிழ் சினிமா காமெடிகள் தான் அதிலும் குறிப்பாக கவுண்டமணி செந்தில் காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. முகபாவனை, காஸ்டியூம், வசனங்கள் ,ஹேர் ஸ்டைல் உட்பட அனைத்தும் சிரிக்கும் படியாக அமைந்திருக்கும். இடை இடையே கவுண்டமணி கூறும் ஆங்கில வசனம் தெறிக்கவிடும். எந்த தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் இவர்களது நகைச்சுவை.. அவற்றுள் சில,

1. கவுண்டமணி பண்ணையாராகவும் ,செந்தில் அவருக்கு எடுபிடியாகவும் நடித்திருக்கும் ஒருபடத்தில் வயலில் இருக்கும் பெண்களை பார்த்து செந்தில், 'மப்பு மந்தாரமா கொத்து கொலையுமா பாக்க கண்ணுக்கு குளு குளுனு இருக்கு அண்ணே ' என கூறியிருப்பார்.இதில் செந்தில் காஸ்டியூம் தான் மாஸாக இருக்கும்.குர்தி மாடலில் ஒரு சட்டையை முட்டி வரை அணிந்திருப்பார். செந்தில் ஹேர் ஸ்டைலை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும்

 

2. கவுண்டமணி செந்திலிடம், 'நீ பாகிஸ்தான் பாடரில் நின்று கொண்டு கொட்டாவி விட்டாலே போதும் அத்தனை பேரும் செத்து போயிருவா' இந்த காமெடியில் கவுண்டமணியின் ஹேர் ஸ்டைல், செந்தில் பெரிய அண்டாவை இடுப்பில் வைத்திருப்பது இவற்றை எல்லாம் பார்க்கும் போதே சிரிப்பு வந்து விடும்..

3. 'வெளவாலுக்கு ஆசைப்பட்டா தொங்கித்தானே ஆகவேண்டும்' இதில் ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள செந்தில் டிரைவர் தொப்பி அணிந்து,தோலில் வயக்காட்டு வேலைக்கு செல்வது போல் துண்டு ஒன்றை அணிந்துள்ளார்.இதை பார்த்தால் சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

4. 'பெரிய சோழர் பரம்பரை, இவர் ராஜராஜ சோழன் ,இவர் மகன் ராஜேந்திரா சோழன் தஞ்சாவூருக்கே இவங்க தான் வாரிசு' கவுண்டமணியை பொறாமை படுத்த தினமும் செந்தில் வெறும் இலையில் நெய்யை தடவி விருந்து சாப்பாடு உண்டது போல சீன் போடுவதும் அதை இறுதியாக கவுண்டமணி கண்டு பிடிப்பதும்,இதில் இடையே நடக்கும் வேடிக்கையில் வரும் வசனம் தான் இது.

எத்தனை காமெடியன்கள் வந்தாலும் ஒரு சிலரது இடங்களை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது.அவர்களுள் கவுண்டமணியும் செந்திலும் முக்கிய அங்கங்கள் என்றே கூறலாம்

 

Top