Highrise

தக்காளியை பற்றி நாசா விஞ்ஞானிகள் யோசித்தால் கூட ஒரு முடிவுக்கு வர முடியாது போலிருக்கே! மண்டையை பிச்சிக்கும் அளவுக்கு தக்காளியை பற்றி அப்படி என்ன சந்தேகம்?

Jun 09 2021 07:27:00 AM

தக்காளி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் தக்காளியின் பயன்பாடு மிக அதிகம். நம் நாட்டை பொறுத்தவரையில் தக்காளி சாம்பார், குருமா, தக்காளி சாதம், தக்காளி தொக்கு, தக்காளி ரசம், சூப்  இப்படியெல்லாம் தக்காளியை சமையலில் பயன்படுத்துகிறோம்.

tomato-new

உலகின் பிற நாடுகளில் சாலட், சூப், சாண்ட்விச், பீட்சா என்று தக்காளியை பயன்படுத்தி சமைக்கிறார்கள். தக்காளியை கெச்சப் மற்றும் சாஸ் போல செய்து நூடுல்ஸ், பாஸ்தா இவற்றிலும் கலந்து சமைத்து சாப்பிடுவதும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காண முடிகிறது. சரி இதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால் தக்காளி விஷயத்தில் அப்படி என்ன பிரச்சனை வந்தது என்று வரலாற்றை புரட்டி பார்த்தால் தக்காளி ஒரு பழமா அல்லது காயா எந்த லிஸ்டில் அதை வகைப்படுத்துவது என்பது பெரிய தலைவலியாக இருந்தது.

tomato-new

அமெரிக்காவில் இந்த விஷயம் பூதாகரமான பிரச்சனையாக வெடித்து நீதிமன்றம் வரை சென்றது. 1893ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தக்காளியை காய்கறி அல்லது பழம் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு காரணம் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் காய்கறிகளை இறக்குமதி செய்வதற்கு வரிவிலக்கு இருந்தது. ஆனால் பழங்களை இறக்குமதி செய்வதற்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.

tomato-new

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாதுர்யமாக ஒரு தீர்ப்பை வழங்கியது. அறிவியல் ரீதியாக பார்த்தால் தக்காளி பழ வகையை சேர்ந்தது தான். ஆனால் பிற பழங்களில் இருந்து தக்காளி வேறுபட்டு இருக்கிறது. தக்காளியை காய்கறி போல சமைக்கிறோம். எனவே சட்ட ரீதியாக பார்த்தால் தக்காளி காய்கறி வகையை சேர்ந்தது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பின் மூலம் தக்காளியை வரிவிலக்கோடு இறக்குமதி செய்து பயன்படுத்த தொடங்கினர் அமெரிக்கர்கள்.