Timeless

அடேய்! என்ன காரியம்டா செஞ்சிட்டு இருக்கீங்க? இதைவைச்சு ஒரு ஊருக்கே சட்டினி ஆட்டலாமே!

Sep 27 2021 04:11:00 PM

நம் ஊரில் சமையலுக்கு பயன்படும் முக்கியமான பொருட்களில் ஒன்று தான் தக்காளி. குருமா, சாம்பார், சட்னி, தொக்கு, தக்காளி சாதம் என்று தக்காளியை வைத்து பலவிதமான அயிட்டங்கள் தயார் செய்யப்படுகிறது. தக்காளியின் விலை அவ்வப்போது உச்சத்துக்கு செல்லும். எனவே நம் ஊரை பொறுத்தவரையில் தக்காளி என்பது அத்தியாவசிய பொருள் மட்டுமல்லாது கொஞ்சம் விலைமதிப்பு மிக்கதாகவும் உள்ளது.

tomato-festival spain

தக்காளி குறித்த கதை ஒன்றை சர்கார் படத்தில் தளபதி சொல்லுவார். அதைக்கேட்கும் யாராக இருந்தாலும் தக்காளியை இனிமேல் தூக்கி எறியக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வாங்க. சர்கார் படத்தின் இந்தக்காட்சியை ஸ்பெயின் நாட்டினருக்கு அடிக்கடி போட்டுக்காட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் அவுங்களுக்கு தான் தக்காளியின் மதிப்பு கொஞ்சம் கூட தெரிவதில்லை.

tomato-festival spain

தக்காளியை வச்சிக்கிட்டு அவுங்க பண்ணுற சேட்டை இருக்கே அதையெல்லாம் சொல்லி புரியவைக்க முடியாது. வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி திருவிழா அங்கு நடத்தப்படுகிறது. அன்றைய தினத்தில் தக்காளியை வச்சி அவுங்க ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு விளையாடுறாங்க. நம்ம சின்ன வயசுல ஸ்கூல் சட்டையில் இங்க் அடித்து விளையாடுவது போல ஸ்பெயின் புள்ளிங்கோ தக்காளியால் அடித்துக்கொள்கின்றனர்.

tomato-festival spain

இந்த ஒரு நாள் கூத்துக்காக கிட்டத்தட்ட 40 டன்னுக்கும் அதிகமான தக்காளிகள் வீணடிக்கப்படுகிறது. நாள் முழுவதும் தக்காளி சண்டையிட்டு களைத்துப்போன மக்கள் நாளின் முடிவில் உடலை சுத்தம் செய்துகொண்டு வீட்டுக்கு செல்கின்றனர். நீங்களே சொல்லுங்க இந்த சப்பை விளையாட்டுக்காக டன் கணக்கில் தக்காளிகளை வீணடிப்பது சரியா?

tomato-festival spain

நான் இந்த தக்காளி திருவிழாவை எதிர்க்கவில்லை. அதற்காக இவ்வளவு தக்காளிகள் வீணடிக்க வேண்டுமா என்பதே என்னுடைய ஆதங்கம். கொஞ்சம் யோசித்து பாருங்க. தலைப்பில் நான் கூறியைப்போல இதை வைத்து சட்டினி அல்லது சாம்பார் வைத்தால் ஒரு ஊரு முழுவதுமே வயிறார சாப்பிடலாம் அல்லவா? சிந்தித்து செயலாற்றினால் எந்தப்பொருளும் வீணாகாது. பணக்கார நாடுகள் தங்களிடம் இருக்கும் வளங்களை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதை ஒரு திருவிழாவாக கொண்டாடலாம். அதைவிடுத்து இந்த மாதிரி பொருட்களை வீணடிக்கும் திருவிழா தேவையா என்பதை ஸ்பெயின் நாடு கொஞ்சம் பரிசீலித்து பார்த்தால் நன்றாக இருக்கும்.