#TNSDC: சினிமாத் துறையில் ஆர்வமா??? அனைத்துத் துறைகளிலும் ஒரு மாத இலவசப் பயிற்சி முகாம்!!! முந்துங்கள்!!!
  • 16:32PM Jul 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:32PM Jul 06,2019 Chennai

சினிமாத் துறை பல்வேறு இளைஞர்களின் கனவையும், வாழ்க்கையையும் மாற்றிப் போடக் கூடிய ஒரு மிகப் பெரிய துறை. இதில் எப்படியாவது சாதித்தாக வேண்டும் என்று இன்று, இந்த நிமிஷத்தில் கூட சென்னையில் கால்பதிப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு ஒரு சின்ன பிரச்சினை. தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளத் தேவையான படிப்புகள் அனைத்திற்குமான பணமும், நேரத் தேவையும் ரொம்பவே அதிகம்.

இதைத் தவிர்க்க யாராவது, குறைந்தபட்சம் அடிப்படைகளையாவது சொல்லிக் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்குபவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு யாராவது இலவசமாகச் சொல்லிக் கொடுக்க முன் வந்தால்??? நிஜம்தான். TNSDC எனப்படும் TAMIL NADU SKILL DEVELOPMENT CORPORATION மற்றும் NFDC INDIA எனப்படும் NATIONAL FILM DEVELOPMENT CORPORATION OF INDIA இரண்டும் இணைந்து, திரைத்துறையின் TECHNICAL DEPARTMENT-களுக்கான ஒரு மாத இலவச பயிற்சி முகாமை அறிவித்துள்ளது.

இதில் கற்றுத் தரப்படும் COURSE-கள் – DIGITAL VIDEOGRAPHY, MULTIMEDIA DESIGNING, AVID – DIGITAL NON-LINEAR EDITING, 3D STUDIO MAX ANIMATION, AUDIO ENGINEERING, FINAL CUT PRO – DIGITAL NON LINEAR EDITING ஆகியவை. கிட்டத்தட்ட திரைத்துறையின் PRODUCTION மற்றும் POST-PRODUCTION-க்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் இந்த ஒரு மாத இலவசப் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். இந்தப் பயிற்சி, இந்த மாதம் 17-ம் தேதி ஆரம்பமாவதால் பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ONLINE மூலமாகவோ PHONE-ல் அழைத்தும் பதிவு செய்யலாம். விபரங்கள் உள்ளே படத்தில் – முந்துங்கள்!!!

Film Creation  |  Movie Cliche  |  Tamil Movies Online  |  Best VR Headset  |  Films and Critics  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top